அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்துவது ஒன்றே மக்களின் கடமை

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

சென்னை, ஏப்.5  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், அகில இந்திய அரசியலிலும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் என்பதை தமிழக வாக் காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே பல மாநி லங்களில் நடைபெறும் தேர்தல்களில் பா... படுதோல்வி அடைந்து வருவது நாடறிந்த ஒன்று. தற்போது தேர்தல் நடைபெற உள்ள கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச் சேரியிலும் பா... கூட்டணி மண்ணை கவ்வுவது உறுதியாகியுள்ளது.

தோல்வி முகம் கண்டுள்ள பா...-.தி.மு.. கூட்டணியை தமிழகத் திலும் வீழ்த்துவதோடு, தமிழகத்தில் பாசிச குணம் கொண்டுள்ள பா...வுக்கு இடம் கிடையாது என்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழக வாக்காளர்களின் கடமை யாகும். தமிழகத்தில் தொடர்ந்து வரும் .தி.மு.. ஆட்சி மக்கள் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கைகளால் தமிழக மக்களின் எதிரியாகவே மாறிவிட்டது. இத் தகைய சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்தின் நலன் காத்திட பா...- .தி.மு.. கூட்டணியை வீழ்த்துவது ஒன்றே மக்களின் உறுதியான கட மையாகும்.

.தி.மு.. மீது சவாரி செய்து கொண்டு பா... தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது. தேசிய அளவில் இன்றைக்கு பா... வலுவான முறையில் பின்னுக்கு தள்ளப்படவேண்டுமானால் தமிழகத்தில் அது சவாரி செய்து கொண்டிருக்கிற .தி.மு.. தோற்கடிக்கப்படவேண்டியது அவசியமாகும். எனவே தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து 234 தொகுதிகளிலும் வெற்றிப்பெற செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Comments