மேற்கு வங்காளத்தில் ஒற்றைக்கால் கொண்டே வெற்றி பெறுவேன் - மம்தா நம்பிக்கை

 சின்சுரா, ஏப். 6 எதிர்காலத்தில் இரு கால்கள் கொண்டு டில்லியிலும் வெல்வேன் என மம்தா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்காளத்தில் ஒற்றைக் காலிலேயே வெற்றி பெறுவேன் என மம்தா நம் பிக்கை தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்காள சட்ட சபை தேர்தலில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (6.4.2021) 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறு கிறது. மாநிலத்தில் இந்த தேர்தலில் ஆளும் திரிணா முல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.

எனவே ஆட்சியை தக்க வைக்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-அமைச்சருமான மம்தா மிகுந்த போராட்டம் நடத்தி வருகிறார். எனினும் தான் மீண்டும் மாநிலத்தில் வெற்றி பெறுவேன் என உறுதிபட தெரிவித்து உள்ளார்.

ஹூக்ளி மாவட்டத்தில் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மம்தா, தனது காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை வெளியிட்டார்.

பிரச்சாரத்தின்போது அவர் கூறியதாவது:-

மேற்கு வங்காள தேர்த லில் நிறுத்துவதற்கு பா.ஜன தாவினரிடம் உள்ளூர் தலை வர்கள் இல்லை. அவர்களது வேட்பாளர்கள் அனைவரும் திரிணாமுல் காங்கிரஸ் அல் லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடம் இருந்து வாங் கப்பட்டவர்களே.

சோனார் பங்களாவை (பொன்னான வங்காளம் - பா.ஜனதாவினரின் முழக்கம்) சரியாக கூற தெரியாதவர் களால் வங்காளத்தை ஆள முடியாது.

மேற்கு வங்காள தேர்த லில் ஒற்றைக்காலிலேயே வெற்றி பெறுவேன். எதிர்காலத்தில் இரு கால்கள் கொண்டு டில்லியிலும் வெல்வேன்.

இந்த தேர்தலில் நந்தி கிராம் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். ஆனால் இந்த தேர்தல் என்னை பற்றியது மட்டுமல்ல, மாறாக திரிணாமுல் காங்கிரஸ் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதற்கான உறுதியை நீங்கள் அளிக்க வேண்டும். இல்லையென்றால் பா. ஜனதா தங்கள் பணபலத்தை வைத்து துரோகிகளை விலைக்கு வாங்கிவிடுவார்கள்.

இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image