கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 6, 2021

கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

சென்னை, ஏப். 6- ஓட்டுச்சாவடியாக செயல்பட்ட அனைத்து பள்ளி களிலும், கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஓட்டுப்பதிவு முடிந்ததும், பள்ளி, கல்லூரிகளின்அறைகளை, கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ஓட்டுச்சாவடி வளாகங்களையும் சுத்தப் படுத்த, கிருமி நாசினி தெளிக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காணொலியில் வைப்புநிதி குறைதீர் கூட்டம்    

மதுரை, ஏப். 6- மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசின் வழிகாட்டுதல் படிநிதி உங்கள் அருகில்எனும் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) குறைதீர் கூட்டம் மதுரை மண்டல அலுவலகத்தில் ஏப்.,12இல் வெபினார் செயலி மூலம் நடக்கிறது.

இதில் நிறுவன முதலாளிகள் மற்றும் உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.இதில் பங்கேற்க கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து .. என்ற செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து மண்டல அலுவலக மின்அஞ்சலுக்கு ஏப்., 9க்குள் அனுப்பி வைக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து காணொலி கூட்டத்தில் பங்கேற்க தொடர்பு எண் தனியாக தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஜிப்மரில் ரத்தம் தட்டுப்பாடு தன்னார்வலர்களுக்கு அழைப்பு 

புதுச்சேரி, ஏப். 6- ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கியில், ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளி களுக்கு நடத்தப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகளவில் ரத்தம் தேவைப்படுகிறது.

ஏராளமான தன்னார்வலர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரடியாக வந்து ரத்த தானம் செய்தனர். தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக, பல தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்க முன்வருவதில்லை.மேலும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ரத்த தானம் வழங்க கூடாது என்பதால், ரத்த தானம் வழங்குவோர் எண்ணிக்கை குறைந்தது. இதனால், ஜிப்மர் ரத்த வங்கியில் ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாசிடிவ், பாசிடிவ் ரத்தம் அதிகளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்து வருவோருக்கு ரத்தம் வழங்க முடியவில்லை.

எனவே, ஏராளமான தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்க முன் வர வேண்டும்.25க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்க முன்வந்தால், ஜிப்மர் ரத்த வங்கியின் மொபைல் டீம், கிராமத்திற்கே நேரடியாக வந்து, கரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன் ரத்த தானம் பெற ஏற்பாடு செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு 84897 96105 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஜிப்மர் ரத்த வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment