எந்த மாநிலமும் ரயில்சேவையை நிறுத்தவில்லை: ரயில்வே அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 18, 2021

எந்த மாநிலமும் ரயில்சேவையை நிறுத்தவில்லை: ரயில்வே அறிவிப்பு

புதுடில்லி, ஏப்.18 எந்த மாநிலமும் ரயில்சேவையை நிறுத்துமாறு கூறவில்லை என்று ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் அறிவித்துள்ளார்.

ரயில்வே வாரியத்தின் தலை வர் சுனீத், டில்லியில் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

அய்.ஆர்.சி.டி.சி.யின் டிக்கெட் இணைய தளத்தில் கரோனா கால நெறிமுறைகள் மாநிலங்களால் பின்பற்றப்படுகின்றன. குறிப் பிட்ட பகுதிகளுக்கு செல்கிற போது தேவைப்பட்டால் பயணி கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரி சோதனை செய்து கொள்ளலாம் அல்லது கரோனா இல்லை என காட்டும் சான்றிதழ்களை பயணத் தின்போது எடுத்துச்செல்லலாம் என அறிவுறுத்தப் படுகிறது.

தற்போது எந்த மாநில அரசும் ரயில்சேவையை நிறுத்துமாறு கூறவில்லை. இருந்தாலும், கவலை எழுகிறபோது, மாநில அரசுகள் பிரச்சினைகள் குறித்து எங்களோடு விவாதித்துள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் கரோனா பரிசோதனைகள் நடத் துகிறார்கள். -டிக்கெட் இணைய தளத்தில், பயணிகள் கரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா, கரோனா இல்லை என காட்டும் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டுமா என்பது குறித்த தகவல்கள் பயணிகளுக்கு வழங் கப்படுகின்றன.

பயணிகளுக்கு வெப்ப பரி சோதனையை ரயில்வே நடத்து கிறது. கரோனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளுக்கு அப ராதம் விதிக்கப்படுகிறது. சிராமிக் சிறப்பு ரயில்கள் (இடம்பெயர்ந் தோர், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு) விடுவதற்கு வாய்ப்பு இல்லை. தேவை ஏற்பட்டு, கோரிக்கை விடுக்கப்பட்டால் மட்டுமே இயக்கப்படும்.

ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவே பல ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் (பிளாட் பார கட்டணம்) உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல் வேறு இடங்களில் 4 ஆயிரம் தனிமைப்படுத்தும் பெட்டிகள் உள்ளன. மராட்டி யத்தில் உள்ள நந்துர்பாரில் இருந்து 100-க்கும் அதிகமான பெட்டிகள் கேட்டு கோரிக்கை வந்துள்ளது. 20 தனி மைப்படுத்தும் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது ரயில்வே தினமும் 1,490 மெயில், விரைவு  ரயில் களையும், 5,397 புறநகர் ரயில் களையும் இயக்குகிறது. நாடு முழுவதும் மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்கு ஏதுவாக 140 கூடு தல் ரயில்களையும் இயக்குகிறது.

இந்த மாதமும், அடுத்த மாத மும் 140 ரயில்கள், 483 சேவை களை வழங்குகின்றன.

-இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment