கரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.05 கோடியாக உயர்வு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உயிரிழப்புகள்

ஜெனீவா,ஏப்.18- கரோனாவைரஸ் தொற்றின் பாதிப்பு பன்னாட்டள வில் உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 14 கோடிக்கும் அதிக மானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் 14 கோடியே 5 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 11 கோடியே 93 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 12 ஆயிரமாக இருக் கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராகக் குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண் ணிக்கை ஒரு கோடியே 45 லட் சத்தைக் கடந்துள்ளது.


Comments