டாக்டர் அம்பேத்கர் - சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் யார்?

தேர்தல் முடிந்து, புதிய அமைச்சரவை  அமைப் பதற்கு முன் தமிழக ஆளுநர் அவசர அவசரமாக சில பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர் களை  நியமனம் செய்ததன் பின்னணி இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத் தின் துணைவேந்தர் யார்?

இதை நாம் சொல்லுவதைவிட சங்கிகளே வெளிப்படுத்தி விட்டார்களே!

ஆர்.எஸ்.எஸ். வார ஏடான 'விஜயபாரதத்தின்' மேனாள் ஆசிரியரும், 'ஒரே நாடு' (-பேப்பர்) ஆசிரியருமான நம்பி நாராயணன் சமூகவலை தளத்தில் பதிவிட்டிருக்கும் தகவல் இது! ஆளுநர் அவசர அவசரமாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்குத் துணைவேந்தரை  நியமனம் செய்ததன் பின்னணி   இரகசியம் இப்பொழுது புரிகிறதா?

Comments