எல்லாம் அவாள் மயமே!

சமூகநீதி, இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும்

மத்திய பாஜக அரசின் அடாவடி:

குறிப்பிட்ட வகுப்பாரே உயர்பதவிகளில்  பணிநியமனம்

மல்லிகா சீனிவாசனுக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங் களின் தலைமை அதிகாரி (CMD)களை நியமிக்கும் பொதுத் துறை தேர்வு வாரியத்தின்  (PESB) தலைவர் பதவி

சிலை திருட்டு வழக்கில் முன்பிணை வாங்கிய டிவிஎஸ் வேணு சீனிவாசனின் மனைவி மல்லிகா சீனிவாசனுக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை (CMD) நியமிக்கும் பொதுத்துறை தேர்வு வாரியத்தின் (PESB) தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அய்ஏஎஸ் தேர்வு எழுதாமல், அரசு துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத மல்லிகா சீனிவாசனுக்கு நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) மூலம் மோடி அரசால் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பணி மூப்பு அடிப்படையில் அய்ஏஎஸ் அதிகாரி கள் வரும் இப்பதவிக்கு மோடி அரசால் உருவாக்கப்பட்ட நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) மூலம் குறுக்கு வழியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எந்தவிதமான இட ஒதுக்கீடு வழிமுறைகளையும் பின்பற்றாமல் பதவிக்கு வரலாம். அய்ஏஎஸ்சுக்கு இணையான அதிகாரம், பதவி அங்கீகாரம், ஊதியம் இன்ன பிற சலுகைகளை அனுபவிக்கலாம்.

இப்பதவிக்கு வரும் மல்லிகா சீனிவாசன் மூலம்conflict of interest, quid pro quo எழாதா என கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.

Comments