திண்டிவனம் கழக மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி அவர்களுக்கு வீர வணக்கம்!

திண்டிவனம் கழக மாவட்டத் தலைவரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான மானமிகு மு.கந்தசாமி அவர்கள் (வயது 83) இன்று (25,4,2021) விடியற்காலை மாரடைப்பால் மரண முற்றார் என்று அறிவிக்க வருந்துகிறோம். ஆசிரி யர் பணிக்கு ஓய்வே  தவிர, கழகப் பணிக்கு ஓய்வு இல்லை என்ற அளவில் எப்பொழுதும் சுறு சுறுப்பாக இயங்கக் கூடிய பெரியார் பெருந் தொண்டருக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக் கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

25.4.2021

Comments