கரோனா பரவல் அதிகரிப்பால் ரஷ்ய தடுப்பூசிக்கும் விரைவில் அனுமதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 6, 2021

கரோனா பரவல் அதிகரிப்பால் ரஷ்ய தடுப்பூசிக்கும் விரைவில் அனுமதி!

 புதுடில்லி, ஏப்.6-இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய2 கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை செலுத்தி வருகிறார்கள். அதன்படி 7 கோடியே 30 லட்சம் பேருக்கு இதுவரை ஊசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா பரவல் மீண்டும்அதிகரித்துள்ளது.எனவே அதை கட்டுப்படுத்த தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவுபடுத்த மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று பிரதமருடன், நிபுணர் குழுவினர் ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசியை அதிகப்படுத்துவது பற்றிகுறித்தும் விவாதித்தார்.

கூடுதலாக தடுப்பூசி மருந்துகளை அனுமதிப்பது என்று முடிவுசெய்தனர். இந்தியாவில் ஏற்கெனவே 2 மருந்துகளை உருவாக்கி உள்ள நிலையில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசி மருந்தையும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகள் நடந்தன.

இந்தியாவில் டாக்டர்ரெட்டி லேபரட்டரி நிறுவனம் ஒப்பந்தம் செய்து இந்த மருந்தை தயாரித்து வருகிறது. இதன் பரிசோதனையும் இந்தியாவில் தொடங்கப்பட் டுள்ளது.

அதன் முடிவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்திற்கு அளித்து இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல் தரும்படி கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லைஎன்று கூறி மேலும் விவரங்களை கேட்டு இருந் தனர்.அந்தவிவரங்களைமருந்து நிறுவனம் வழங்கஉள்ளது. இதையடுத்து விரைவிலேயே ரஷ்ய மருந்துக்கும் அனுமதி அளிக்க உள்ளனர். இன்னும் 10 நாட்களுக்குள்அனுமதி அளிக்கப்பட்டுவிடும் என்று மத்திய அரசுவட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளுடன் இணைந்துஸ்புட்னிக்-வி மருந்தும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

No comments:

Post a Comment