கரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவத் தயார் என சீனா அறிவிப்பு

பீஜிங்,ஏப். 25- கரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என சீன வெளியுறவுத்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கடந்த சில நாட்களாக உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.   நேற்று வரை இந்தியாவில் 1.62 கோடிக்கும் மேல் பாதிக் கப்பட்டு சுமார் 1.87 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 24.22 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் நாடெங்கும் ஆக்சிஜன், ரெம் டெசிவிர் மருந்து, வெண்டி லேட்டர்கள்,  உள்ளிட்டவற் றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது.   இந்திய அரசு கரோனா பரவலைக் கட்டுப்ப டுத்த கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.   ஆயினும் கரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.

நேற்று சீன நாட்டு வெளி யுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், இந்தியா தற் போது கரோனா அதிகரிப் பால் மிகவும் கடுமையான ஆபத்தில் உள்ளது.   இதைச் சீன அரசு கவனித்து வருகிறது.  உலக மக்கள் அனைவருக்கும் கரோனா பரவல் என்பது பொதுவான எதிரியாக உள் ளது.  எனவே அனைத்து சர்வ தேச நாடுகளும் தற்போது ஒருவருக்கொருவர் அவசியம் உதவ வேண்டும்.

தற்போது இந்தியாவில் தற்காலிகமாகப் பல மருந்து கள், மற்றும் மருத்துவ உபகர ணங்கள், ஆக்சிஜன் போன்ற வற்றுக்குத் தட்டுப்பாடு உள்ளதாகச் சீனாவுக்குத் தெரிய வந்துள்ளது.  எனவே இந்தியாவுக்கு தேவையான உதவிகளையும் ஆதரவையும் அளித்து கரோனாவை கட்டுப்படுத்த உதவி செய்ய சீனா தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Comments