கோடை விடுமுறையை வெளிநாடுகளில் செலவழிக்கலாம்: பிரிட்டன் அனுமதி

லண்டன், ஏப். 11- பிரிட்டன் மக்கள் தற்போது கோடை கால விடுமுறையை வெளி நாடுகளில் செலவிடுவதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்கை தொலைக்காட்சியில் ஷாப்ஸ் பேசும்போது, “நீங்கள் உங்கள் கோடை விடுமுறையை வெளி நாடுகளில் செலவழிக்க பய ணச் சீட்டுகளை ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று கூற மாட்டேன். நீங்கள் உங்கள் விடுமுறையை வெளிநாடு களில் செலவழிப்பதைப் பற் றிச் சிந்திக்கலாம். எனினும் மக்களுக்கு கரோனாவின் ஆபத்து குறித்து தெரிந்தி ருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் இதில் எச்சரிக்கையாக இருப்போம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கரோனா பரவுவதை நாங்கள் விரும்ப வில்லைஎன்று தெரிவித்தார்.

கரோனா தடுப்பூசி செலுத் துவதைத் தீவிரப்படுத்திய தைத் தொடர்ந்து பிரிட்டனி லும் கரோனா தொற்று விகி தம் குறைந்துள்ளது. பிரிட்ட னில் கடந்த சில வாரங்களாக 5,000க்கும் குறைவானவர் களே கரோனாவால் பாதிக் கப்பட்டு வருகின்றனர்.

பிரிட்டனில் 60% கரோனா தொற்று குறைந்து உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கரோனா தொற்றுப் பரவல் குறைந் துள்ளதன் காரணமாக பிரிட் டனில் அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

உலகம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடு களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

சுமார் 13 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழு வதும் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 கோடிக்கும் அதிக மானோர் குணமடைந்து உள்ளனர்.

Comments