விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு பிரான்சு உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 16, 2021

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு பிரான்சு உதவி

 புதுடில்லி, ஏப்.16 விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு பிரான்சு உதவுகிறது. இதற்காக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி ஆய்வில் பல்வேறு சாதனை களை படைத்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.

ககன்யான் என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தை, நாடு விடுதலை பெற்ற 75 ஆவது ஆண்டையொட்டி 2022 ஆம் ஆண்டில் நிறைவேற்ற வேகமாக பணிகள் நடந்து வருகின்றன.கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பணிகள் கரோனா பொதுமுடக்கத்தால் தாமதமாகி வருகிறது. எனினும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிட இஸ்ரோ தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் இந்த மைல்கல் திட்டத்துக்கு பிரான்சின் உதவியை இஸ்ரோ நாடியுள்ளது. அதன்படி இஸ்ரோ மற்றும் பிரான்சின் விண்வெளி ஆய்வு நிறுவனமான சி.என்..எஸ். இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது.

இந்தியா வந்துள்ள பிரான்சு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-வெஸ் லி டிரையன் நேற்று (15.4.2021) இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த ஒப்பந்தப்படி ககன்யான் திட்டத்துக்கு பிரான்சு பல்வேறு உதவிகளை வழங்கும். குறிப்பாக இந்திய விண்வெளி வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பிரான்சு விண்வெளி ஆய்வு மய்யங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

அத்துடன் உணவு பேக்கிங், ஊட்டச்சத்து திட்டம் பற்றிய தகவல்கள் பரிமாறுதல், சரிபார்ப்பு பணிகள் போன்றவற்றை சி.என்..எஸ். மேற் கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக பிரெஞ்சு உபகரணங்கள், நுகர் பொருட்கள் மற்றும் மருத்துவ கருவிகளை இந்திய வீரர்கள் பயன்படுத்துவது தொடர்பான அறிவியல்பூர்வ பரிசோதனை திட்டத்தை சி.என்..எஸ். செயல்படுத்தும்.

சி.என்..எஸ். உருவாக்கி சோதித்து பன்னாட்டு விண்வெளி மய்யத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் கருவிகள் இந்திய வீரர்களுக்கும் கிடைக்கும். இதைப்போல அதிர்வுகள், கதிரியக்கம் போன்ற வற்றை தாங்குவதற்காக பிரான்சில் தயாரிக்கப்பட்ட தீப்பிடிக்காத பைகளை இந்திய வீரர்களுக்கு சி.என்..எஸ். வழங்கும்.

இந்த ஒப்பந்தத்தில் பிரான்சு வழங்கும் ஒத்துழைப்பை எதிர்காலத்துக்கும் நீட்டிக்க முடியும். குறிப்பாக பெங்களூருவில் விண்வெளி வீரர் களுக்கான பயிற்சி மய்யம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் பிரான்சின் உதவியை பெற முடியும் என சி.என்..எஸ். தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment