தாராபுரம் கழக மாவட்டம் சார்பாக கழக குடும்பத்திற்கு மருத்துவ நிதியுதவி

உடுமலை, ஏப். 16- தாராபுரம் கழக மாவட்டம் சார்பில் கழக குடும்பத் திற்கு மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டது.

தாராபுரம் கழக மாவட்டம், உடுமலை வட்டம்,பெதப்பம்பட்டி திராவிடர் கழக தோழர் பன்னீர்செல்வம் தற்போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதையொட்டி அவருக்கு மருத்துவ உதவி வழங்கிடும் வகையில் தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கணியூர் கிருஷ்ணன் தலைமையில் கழக தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம்  நிதி திரட்டப்பட்டு வந்தது. இந் நிலையில் 13.04.2021 அன்று கழக தோழர்கள், பெதப்பம்பட்டி பன்னீர்செல்வம் இல்லம் செனறு அவரது வாழ்விணையர் மல்லிகா அவர்களிடம் முதற்கட்ட மருத்துவ நிதியுதவியாக ரூ 8,650/- அய் வழங்கினர். இந்நிகழ்வில் தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கணியூர் .கிருஷ்ணன்,கணியூர் தங்கவேல், துங்காவி வெங்கடாசலம், உடுமலை முருகேசன்,பெதப்பம்பட்டி  ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

Comments