கரோனா சூழலை மோடி அரசு தவறாக கையாண்டுள்ளது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.12 மோடி அரசு கரோனா சூழலை மோச மாக கையாண்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில், தடுப்பூசிக்கு தட்டுப் பாடு ஏற்படும் சூழல் இருப்ப தாக பல்வேறு மாநிலங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.  இந்த சூழலில், நாட்டில் கரோனா வைரஸ் பரவல், தொற்றைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள், காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 10.4.2021 அன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத் தில் பங்கேற்றனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் இந்தக் கூட் டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:

முதலில் நாம் நம் நாட்டு மக்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், வேகப் படுத்த வேண்டும்.

அதன்பின்பு தான் ஏற்று மதி குறித்தும், மற்ற நாடு களுக்குத்தடுப்பூசியைப் பரிசளிப்பது குறித்தும் பேச வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தினார்.

மத்திய அரசு கரோனா வைரஸ் பரவலையும் சரியாகக் கையாளாமல் கட்டுப்படுத்தவு மில்லை, தற்போது தடுப்பூசி யையும் பற்றாக்குறை இல் லாமல் கொண்டு செல்ல முடியவில்லை என சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

கரோனா பரவல் அதி கரித்து வருவதால், மக்கள் கூடும் அனைத்துவிதமான திருவிழாக்கள், தேர்தல் பிரச் சாரங்கள், பொதுக்கூட்டங் களை ரத்து செய்ய வேண்டும் என சோனியாகாந்தி வலி யுறுத்தினார் என்றார்.

இந்தக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிஸ் நாடாளு மன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments