மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் இழப்பீடு வழங்கினால் இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு ரத்தாகும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஏப்.12இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் ரூ.10 கோடி இழப்பீடு வழங்கினால் இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவின் கொல்லம் மீன்பிடித் துறைமுகம் அருகே இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012 பிப்ரவரி 15-ஆம் தேதி விசைப்படகில் 11 இந்திய மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போதுஎன்ரிகா லாக்சிஎன்ற இத்தாலிய சரக்கு கப்பல் அந்த வழியாக சென்றது.

சரக்கு கப்பலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இத் தாலி கடற்படையை சேர்ந்த மசிமிலி யானோ லதோர், சல்வடோர் கிரானே ஆகி யோர் சந்தேகத்தின்பேரில் இந் திய மீனவர்களை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜீஸ் பிங்க், ஜெலஸ்டின் உயிரிழந் தனர். உடன் இருந்த 9 மீனவர்கள் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டில் அவர் கள் இத்தாலி திரும் பினர். இந்த வழக்கை விசாரித்த பன்னாட்டு நீதிமன்றம், “இந் திய மீனவர்களை இத்தாலி வீரர்கள் சுட்டுக் கொன்றது குற்றம். இதற்கான இழப்பீட் டை இத்தாலி அரசு வழங்க வேண்டும்என்று உத்தர விட்டது.

இதனிடையே இத்தாலி வீரர்கள் மீதான வழக்கை முடித்து வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்..பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிர மணியன் அமர்வு முன்பு 10.4.2021 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய  அரசு சார்பில் ஆஜ ரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பாதிக்கப் பட்ட மீனவர் குடும்பங்களுக்கு ஏற்கெனவே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இத் தாலி அரசு இதுவரை ரூ.2.17 கோடி வழங்கி உள்ளது. தற் போது இத்தாலி அரசு வழங் கும் ரூ.10 கோடி இழப்பீட்டை பெற்று கொள்ள பாதிக்கப் பட்ட மீனவர்களின் குடும்பத் தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்என்றார்.

இத்தாலி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சோகைல் தத்தா கூறும்போது, “இந்திய அரசு வங்கிக் கணக்கு விவரங்களை அளித்த உடன் ரூ.10 கோடி இழப்பீடு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்என்று கூறினார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “இத்தாலி அரசு இழப்பீடு தொகையை செலுத்திய பிறகு உச்ச நீதிமன்றத் தின் வங்கிக் கணக்குக்கு உடனடி யாக இழப்பீடு தொகை பரிமாற்றம் செய்யப்படும்என்று உறுதி அளித்தார்.

அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்ட பிறகு தலைமை நீதிபதி பாப்டே கூறும்போது,

ரூ.10 கோடி இழப்பீட்டு தொகையை இத்தாலி அரசு செலுத்திய பிறகு, அந்த நாட்டு கடற்படை வீரர்கள் மீதான குற்ற வழக்குகள் முடித்து வைக்கப்படும்என்று உத்தர விட்டார்.

வழக்கின் அடுத்த விசா ரணை வரும் 19-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Comments