பொதுக்கல்விக்கான மாநில மேடையின் முக்கிய தீர்மானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 15, 2021

பொதுக்கல்விக்கான மாநில மேடையின் முக்கிய தீர்மானங்கள்

சென்னை, ஏப்.15 பொதுக்கல்விக் கான மாநில மேடையில் நிறைவேற்றப் பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

தேசியக் கல்விக் கொள்கை 2020அய், தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்:

குலக் கல்வித் திட்டத்தின் புது வடிவமாக உருவாகியுள்ள தேசியக் கல்விக்கொள்கை 2020அய், சமூகநீதியின் அடிப் படையில் அனைவருக்கும் கல்வி வழங்கி வரும் தமிழ்நாடு அரசு, நிராகரிக்க வேண்டும் என்று இக் கருத்தரங்கம் கோருகிறது.

தீர்மானம் 2:

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்:

மாநில மக்களின் தேவைகளை உணர்ந்து, சமமான கற்றல் வாய்ப்பு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைவரும் பெற்றிட வழி செய்திட "மாநிலக் கல்விக் கொள்கை"யைத் தமிழ்நாடு அரசு வகுத்திட வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கோருகிறது.

தீர்மானம் 3:

மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழுவை அமைத்திட வேண்டும்:

கோத்தாரி கல்விக்குழு தொடங்கி முனைவர் முத்துக்குமரன் குழு வரை பொதுப்பள்ளி முறைமையை வலியுறுத்தி உள்ளது. அரசின் பொறுப்பிலும் செலவிலும், அருகமைப்பள்ளி அமைப்பில், தாய் மொழி வழியில், பொதுப் பள்ளி முறைமையை உருவாக்கி, கல்வி உரிமை வழங்குதல், அனைவரும் உயர் கல்வி பெறும் வகையில் அரசு உயர்கல்வி நிறுவனங்களை வலுப்படுத் துவதுஅதன் எண்ணிக்கையைத் தேவைக் கேற்ற வகையில் அதிகப் படுத்தி, சமூகநீதியின் அடிப்படையில் கல்வி பரவலாக்கப்பட, "தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கைஉரு வாக்கத்திற்கான குழுவைத் தமிழ்நாடு அரசு அறிவித்திட வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கோருகிறது.

தீர்மானம் 4:

பொறுப்பேற்கும் முதல்-அமைச்சரின் முதல் கையெழுத்து:

சட்டப் பேரவை தேர்தல் முடிந்துள்ள சூழலில், புதியதாக பொறுப்பேற்கும் அரசிற்கு தலைமை ஏற்கும் முதல்-அமைச்சர், தான் பொறுப் பேற்றவுடன் இடும் முதல் கையெழுத்து 'தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழு" அமைக்கும் அரசாணைக்கு வழி செய்யும் கையெழுத்தாக அமைய வேண்டும் என்று இக் கருத்தரங்கு கோருகிறது.

தீர்மானம் 5: 

கல்வியின் தரத்தை வரையறை செய்தல்

பள்ளிக் கல்வி, உயர் கல்வி, உயர் கல்வியின் தரத்தை வரையறை செய்தல், தொழில் கல்வி, தொழில் நுட்பக் கல்வி உள்ளிட்ட கல்வியின் அனைத்து அம்சங்களும் மாநிலச் சட்டப் பேரவையின் அதிகார வரம் பிற்குள் கொண்டு வரும் வகையில் பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை  மீண்டும் மாநிலப் பட்டி யலுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று இக் கருத்தரங்கம் கோருகிறது

No comments:

Post a Comment