நிதி மற்றும் ஊடகத்துறை மீது பா.ஜ.க. முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது: மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

நிதி மற்றும் ஊடகத்துறை மீது பா.ஜ.க. முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது: மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

 புதுடில்லி, ஏப். 3- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப் பினருமான ராகுல்காந்தி நேற்று  (2.4.2021) அமெ ரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக் கத்தில் உள்ள ஹார்வர்ட் கென்னடி ஸ்கூல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

கென்னடி ஸ்கூல் சார்பில் தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தொகுப்பாளராக செயல்பட்ட அந் நிகழ்ச்சியில் பொதுச்சேவை, கரோனா வைரஸ் தொற்று, அரசியல், குவாட் கூட்டணி விவ காரங்கள் குறித்த விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் ராகுல்காந்தி பேசியதாவது, அசாமில் வாக்குப்பதிவு இயந்திரம் பாஜக வேட் பாளர் காரில் கொண்டு செல்லப்படும் காணொ லியை எங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எனக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், அந்த விவ காரம் தொடர்பாக தேசிய ஊடகத்தில் எதுவும் பேசப்படவில்லை. நிதி மற்றும் ஊடகத்துறை மீது பாஜக முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. காங்கிரஸ் மட்டுமல்ல, பகுஜன் சமாஜ்வாதி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல்களில் வெற்றிபெறுவதில்லை என்று தெரிவித்தார். 

தேர்தலில் போட்டியிட நிறுவன கட்டமைப் புகள் எனக்கு தேவை. என்னை பாதுகாக்கும் வகையிலான நீதி கட்டமைப்பு எனக்கு தேவை. நியாயமான சுதந்திரமான ஊடகத்துறை எனக்கு தேவை. நிதி சமநிலை எனக்கு தேவை. ஒரு அரசியல் கட்சியை இயக்க என்னை அனுமதிக்கும் முழு கட்டமைப்புகள் எனக்கு தேவை. ஆனால், அவை எனக்கு இல்லை. இதனையடுத்து, அவர் பேசியதாவது: அமெரிக்கா ஒரு ஆழமான யோசனை என்று நான் அடிப்படையில் நம்பு கிறேன். உங்கள் அரசமைப்பில் சுதந்திரம் பற்றிய யோசனை மிகவும் சக்திவாய்ந்த யோசனையாகும், ஆனால் நீங்கள் அந்த யோசனையை பாதுகாக்க வேண்டும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment