மதத்தால் மாறுபட்டாலும் இனத்தால் ஒன்றுபட்ட திராவிடர்கள் நாம்! மதவாதத்தைத் திணித்துக் கலவரத்தை உண்டு பண்ணுவார்கள் - எச்சரிக்கை!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 5, 2021

மதத்தால் மாறுபட்டாலும் இனத்தால் ஒன்றுபட்ட திராவிடர்கள் நாம்! மதவாதத்தைத் திணித்துக் கலவரத்தை உண்டு பண்ணுவார்கள் - எச்சரிக்கை!!

 ராஜ்ஜியத்தை எதிர்பார்ப்பவர்களுக்குக்கிடைக்கப் போவது பூஜ்ஜியமே!

தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை 

நமது சிறப்புச் செய்தியாளர்

சென்னை, ஏப்.5 மதத்தால் மாறுபட்டாலும், இனத்தால் திராவிடர்கள் நாம். நம்மிடையே மதவாதத்தைத் திணித்துக் கலவரத்தை உருவாக்குவோரை - தேர்தலில் வீழ்த்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (4.4.2021) திருச்சி மேற்கு தொகுதி, தஞ்சாவூர் தொகுதியில் இறுதிகட்ட  தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவ்விவரம் வருமாறு:

திருச்சி மேற்கு தொகுதியில் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர்  கே.என்.நேரு அவர்களை ஆதரித்து  நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். பீமநகர் பகுதி செயலாளர் முபாரக் அலி வர வேற்புரை வழங்கிட, மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மண்டல செயலாளர் .ஆல்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற் றினர்.

தமிழர் தலைவர் உரை

அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றிய தாவது:

இந்தத் தொகுதி என்றைக்கும் தி.மு..தான் - உதயசூரியன் தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உறுதிசெய்யப்பட்ட தொகுதி. அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. சிறுபான்மை மக்கள் அதிகம் வாழக் கூடிய இந்தப் பகுதியில் உங்களை சந்திக்க வந்திருக் கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கண் ணியத்திற்குரிய காயிதேமில்லத் போன்ற தலைவர்கள் எல்லாம் உருவாக்கிய சமூக ஒற்றுமையை மோடியின் அரசு சிதைக்கப் பார்க்கிறது.

‘‘மதத்தால் மாறுபட்டவர்கள் இனத்தால் திரா விடர்கள்'' என்று சொல்லக் கூடியவர்களைப் பிரித்து சூழ்ச்சி செய்து கொடுமைபடுத்தினார்கள். இவர்களுக்கு இங்கிருக்கும் மாநில அரசின் ...தி.மு.. நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்ததால்தான் இன்றைக்குக் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இஸ்லாமிய பெருமக்கள் உழவர் சந்தையில் போராட்டம் நடத்திய போது நாங்கள் நேரில் வந்து உங்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். காரணம் நாங்கள் என்றைக்கும் உங்களோடு இருக்கக் கூடிய வர்கள். மோடிக்கு கையில் சரக்கு இல்லாமல் போனதால் ரெய்டு விட்டு மிரட்டிப் பார்க்கிறார்கள்.

பணத்தால் உங்களை ஏமாற்ற வருவார்கள். கவன மாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடைசி நேர வித்தைகளை கையாண்டு சூழ்ச்சியில் ஈடுபடுவார்கள். கவனமாக இருந்து மேனாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

மாநகர செயலாளர் மு.அன்பழகன், தி.மு.. பகுதி செயலாளர் போட்டோ கமால், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் ஜவகர், .மு.மு..மாவட்ட செயலாளர் அசரப் அலி ஆகியோர் பங்கேற்றனர்.

முடிவில் திருச்சி மாநகர தலைவர் .துரைசாமி நன்றி கூறினார்.

தஞ்சாவூர் தொகுதியில் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தஞ்சாவூர் தொகுதி தி.மு.. வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் அவர் களை ஆதரித்து  தஞ்சாவூர் பெரியார் - அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இறுதிகட்ட தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வழக்குரைஞர் .அமர்சிங் தலைமை வகித்தார். மாநகர தலைவர் நரேந்திரன் வரவேற்புரை வழங்கிட மண்டல தலைவர் அய்யனார், மாவட்ட காப்பாளர் வெ.ஜெயராமன், மாவட்ட செயலாளர் அருணகிரி, மண்டல செயலாளர் .குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழர் தலைவர் உரை

இறுதி கட்ட பரப்புரையில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்த வாகனத்தில் நின்று உரையாற்றினார்.

அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

இந்தத் தேர்தல் பரப்புரையின் இறுதி கட்ட கூட்டத்தில் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். இந்தப் பகுதி எங்களுக்கு உரிமையான பகுதியாகும். நம்முடைய வேட்பாளர் நீலமேகம், அவருடைய தந்தையார் டி.கே.கோவிந்தராஜ் காலம் தொட்டு இந்த இயக்கத் திற்கான அரும்பணி ஆற்றி வருபவர். ஒரு கொதிநிலை சூழலில் கடும் வெப்பத்தைவிட கொடுமையான ஆட்சியை அகற்றிட இந்தத் தேர்தல் நமக்கு ஒரு வாய்ப்பு. வேட்பாளர்கள் தயாராகும் முன்பே வாக் காளர்கள் தயாரான சிறப்பு இந்தத் தேர்தலுக்கு உண்டு. ( பலத்த கைதட்டல்) காரணம் என்னவென்றால் மத்தியில் உள்ள மோடியின் ஆட்சிக்கு அடிமைப்புரி சாசனம் எழுதி கொடுத்த ...தி.மு.. ஆட்சியினால் அனைத்துத் துறைகளிலும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என எல்லோரும் அவதிப்பட்ட நிலை கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. .தி.மு.. தலைமையிலான கூட்டணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எந்த வகையிலாவது தி.மு..வின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்று புதிய புதிய வித்தைகளை கையாண்டு இன்று காலை வெளிவந்த சில நாளிதழ்களில் நான்கு பக்க அளவிற்கு விளம்பரமாக சில செய்திகளை கொடுத்து மக்களை குழப்பலாம் என்று கருதியுள்ளனர். பாவம் அந்த நாளிதழ்களுக்கு ஏதோ தி.மு..வின் தயவினால் வருமானம் கிடைத்துள்ளது அவ்வளவுதான். அதற்கு மிகத் தெளிவாக நம்முடைய தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் பதில் சொல்கிறார் கேளுங்கள் (நேற்று காலை இதுகுறித்து தளபதி மு..ஸ்டாலின் பேசிய பேச்சின் ஒரு பகுதி- இரண்டு நிமிட உரை ஒலிபெருக்கி மூலம் வாக்காளர்களுக்கு ஒலிபரப்பப் பட்டது).

அதில் .இராசா, கனிமொழி அவர்கள் மீது புனையப்பட்ட 2ஜி வழக்கை சொல்லி 1760000000000 என்று பத்து பூஜ்ஜியங்களை போட்டு அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்ததை எல்லாம் விட்டுவிட்டு, இப்படி விளம்பரம் செய்துள்ளார்கள். பூஜ்ஜியத்தை நம்பினால் ராஜ்ஜியம் கிடைக்கும் என்று நம்பியுள்ளார்கள். கண்டிப்பாக அவர்களுக்குக் கிடைக்கப் போவது தேர்தல் முடிவில் பூஜ்ஜியம் தான். வடக்கே இருந்து வந்த நமது பிரதமர் மோடி அவர்களுக்கு திடீரென அவ்வையார் மீது, பாரதியார் மீது, திருக்குறள் மீது காதல் வந்திருக்கிறது.

‘‘வரப்புயர நீருயர'' என்று பாடுகிறார். கடைசியில் ‘‘பெட்ரோல் விலை உயர, டீசல் விலை உயர, கேஸ் விலை உயர'' என்று ஆகிவிட்டது (கைதட்டல்).

தளபதி மு..ஸ்டாலின்

ஆளப்போகும் மண்

அண்மையில் மதுரைக்கு வந்தார் மோடி. சரிதான் .அய்.எம்.எஸ்.(எய்ம்ஸ்) பற்றி பேசப்போகிறார் என்று பார்த்தால் டி.எம்.எஸ். பற்றி பேசுகிறார். மதுரைவீரன் படத்தைப் பற்றி பேசுகிறார்.நீங்கள் என்ன வித்தை காட்டினாலும் இங்கே பலிக்காது.

காரணம் இது தந்தை பெரியார் மண். பேரறிஞர் அண்ணா ஆட்சி செய்த மண், பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சி செய்த மண், முத்தமிழறிஞர் கலைஞர் ஆண்ட மண். வரும் மே மாதம் 2 ஆம் தேதிக்குப் பிறகு தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் ஆளப்போகும் மண்.

.தி.மு.. கூட்டணியினர் இரண்டு விசயங்களை நம்பியுள்ளனர்.ஒன்று பணமூட்டை, மற்றொன்று பொய் மூட்டை.

இந்த ஊழல் மூட்டைகள் அழுக்கு மூட்டைகளை நம்ப மக்கள் தயாரில்லை.

எனவே, வாக்காளப் பெருமக்களே வாக்களிக்கச் செல்லும்போது அங்கே நீலமேகம் என்ற பெயரை பாருங்கள்  (நான்காவது இடத்தில் உள்ளது என்று பொதுமக்கள் கூறிட) இப்போது நான்காவது இடமாக இருக்கும். ஆனால் மே 2  ஆம் தேதிக்குப் பிறகு இவர்தான் முதலிடம் என்ற நிலை வரும்.

எனவே, உதயசூரியன் சின்னத்தைப் பார்த்து பொத்தானை அழுத்துங்கள். விளக்கு எரிகிறதா? வெளிச்சம் தெரிகிறதா? என்று கவனமாகப் பாருங்கள்.

அங்கே விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டில் விளக்கு எரியும்.நாட்டில் விளக்கு எரியும். இருள் அகலும். ஒளி பிறக்கும்.

‘‘திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு அதை சொல்லும்!''

நன்றி! வணக்கம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

 முன்னதாக வேட்பாளரின் சார்பில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பங்கேற்றோர்

பரப்புரை கூட்டத்தில் தஞ்சை தொகுதி வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம், மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், தி.மு.. தலைமைச்செயற்குழு உறுப்பினர் செல்வம், தி.மு.. மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், .தி.மு.. மாவட்ட செயலாளர் சோ.உதயகுமார், சி.பி.எம்.மாவட்ட செயலாளர் நீலமேகம், சி.பி.அய். மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, வி.சி.. மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, ... துணைப் பொதுச்செயலாளர் அய்.எம்.பாதுஷா, .யூ. மு.லீக் மாவட்ட தலைவர் ஜெயினுலாபிதீன், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட தலைவர் நாத்திகன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தஞ்சை மாநகர செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

இறுதி கட்ட பரப்புரையில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் பேரா..சுப்பிரமணியம், கழக வழக் குரைஞரணி தலைவர் வழக்குரைஞர் .வீரசேகரன், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment