காகிதமா, தொடுதிரையா?

டேப்லெட் எனப்படும் பலகைக் கணினிகள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவற்றில் எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட 'ஸ்டைலஸ்' எனப் படும் மின்னணு பேனா இப்போது பிரபலமாகி யுள்ளது. சரி, ஸ்டைலர் மூலம் பலகைக் கணினியில் எழுதும்போதும், சாதாரண பேனாவால், காகிதத்தில் எழுதும்போதும் மூளையில் என்ன நிகழ்கிறது?

அண்மையில். 'பிரான்டியஸ் இன் பிஹேவியரல் நியூரோசயன்ஸ்', இதழில் இது குறித்த ஆய்வு வெளிவந்துள்ளது. அதன்படி, பலகைக் கணினி திரை மீது, ஸ்டைலசைப் பிடித்து எழுதுவதைவிட, பேனாவால் காகிதத்தில் எழுதுகையில், மூளையின் செயல்பாடு அதிகரிப்பதோடு, எழுதிய தகவல்கள் நன்கு நினைவில் பதிகின்றன.

பலகைக் கணினி திரையில், எழுதிய தகவல்களை மேலும் கீழுமாக தள்ளிவிட முடியும். ஆனால், காகிதத்தில் அப்படி செய்ய முடியாது. பக்க அளவு, அதில் நாம் எழுதிய இடம், வரைந்த படம் போன்றவை அப்படியே நம் மனதில் படமாக நினைவில் வைக்க முடியும்.இது போன்ற காரணிகளால் பேனாவும், காகித மும் இன்னும் முதலிடத்தை வகிக்கின்றன.

Comments