அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடிய கரோனா நோய்க்கு தடுப்பூசி போடப்படுவதில் திடீரென்று ஏற்பட்ட சுணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 26, 2021

அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடிய கரோனா நோய்க்கு தடுப்பூசி போடப்படுவதில் திடீரென்று ஏற்பட்ட சுணக்கம்

கரோனா -19 நோய்க்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் நெருக்கடியின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பொது மக்கள் பீதி அடைந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்ததை அடுத்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு  அனுமதி கொடுத்ததுடன், மருந்து வாங்கும் நடைமுறையில் அரசுக்கு அதிகக் கட்டுப்பாட்டு அதிகாரம் அளித்தும் உள்ளது. இது தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்கச் செய்வதிலும்நோய்த் தொற்று வெகுவேகமாகப் பரவி வருவதற்கும் இடையே, தடுப்பூசி வாங்குவது, விநியோகம் செய்வது ஆகியவற்றின் மேலாண்மையிலும் உள்ள பிரச்சினைகள் மற்றொரு   புறமிருக்கின்றன. இதை சரி செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை அவ்வளவு எளிதாக இருந்திருக்க முடியாது. முதலாவதாக, தடுப்பூசி தயாரிப்பதற்கான இந்தியாவின் திறமையை மேம்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாத தொடக்கம் முதலாக தொடங்கி நடை முறைப்படுத்தி வரும் அரசின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டுஇந்திய குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்குத் தேவையான மருந்தைத் தயாரிப்பதற்கு குறைந்தது ஆகஸ்ட் மாதம் வரை பிடிக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. மிகவும் பாதிக்கப்பட இயன்ற 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதை அரசு தனது இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதை கடந்த டிசம்பர் மாதத்தில் அரசு அறிவித்தது. இதுவரை 12.7 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொண்டால், இதில் சேர்ந்த உடல் நலப் பிரச்சினை இல்லாத 45 வயதுக்கு மேற்பட்ட 1.7 கோடி  மக்கள்  அல்லது பயனாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களில் 5 சதவிகித மக்கள் அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசி ஏற்கெனவே போடப் பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 30 லட்சம் என்ற ஆக்கபூர்வமான விகிதத்தில் தயாராகிறது என்று எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு வயது வந்தவருக்கும் முதன் முறையாக தடுப்பூசி போடுவதற்கே   260 நாள்கள் பிடிக்கும்.

தினந்தோறும் நோய்த் தொற்று ஏற்படுவது எட்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் பெருமளவில் குறைந்து வந்திருந்தது. தங்களது செயல்பாடுகள் காரணமாக இந்த நோய்த் தொற்றின் இரண்டாவது அலை வந்து தாக்கு வதற்கான வாய்ப்பு இல்லை என்று இந்தியாவின் தலைமையே நம்பியது. இந்த ஆண்டுக்குள் வயது வந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்ற திட்டத்தை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு, தடுப்பூசி தயாரித்தளிக்கும் ஒப் பந்தத்தை இந்தியா ஏன் மேற்கொள்ளவில்லை என்பதற்கு வேறு எந்தக் காரணத்தையும் கூறமுடியாது. பல்வேறுபட்ட தரங்கள் இந்தியா விலும் கடைப்பிடிக்கப்பட்டன. நோய்த் தொற்று இருக்கிறதா என்பதை நுணுக்கமாக சோதனை செய்யும் பரிசோதனைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு கடுமை யான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தடுப்பூசி விநியோக வழிகளும் போதுமானவையாக இருக்கவில்லை. கரோனா தோய்த் தொற்றின் இரண்டாவது அலைவரிசை தாக்குதல், நோயாளிகள் பெரும் எண்ணிக்கையில் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டது, போதுமான உயிர்க் காற்று மருத்துவ மனைகளில் இல்லாமல் போனது ஆகியவை முன்னர் திட்டமிடப்பட்டிருந்த வழிகள் அனைத்தையும் தடம் புரள வைத்து விட்டன.

அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மே

1 ஆம் தேதி முதல் தொடங்கவும், தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் விலை பேரம் பேசுவதற்கு மாநில அரசுகளை அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. என்றாலும் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கிறது என்பது போல அது ஒலிக்க வில்லை. ஜூன் மாதம் வரை நிலவப் போகும் தடுப்பூசி பற்றாக் குறையின் பின்னணியில்,  கடுமையான தடுப்பூசி பற்றாக் குறை நிலவும் என்பது போன்ற கதைகள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 'பிஸ்ஸர்' மற்றும் 'மாடர்னா' போன்ற பன்னாட்டு தயாரிப்பாளர்கள் தடுப்பூசி மருந்தை மற்ற நாடுகளுக்கு விநியோகிப்பதற்கு ஏற்கெனவே ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளன. தடுப்பூசி மருந்து விநியோகத்தை தாராளமயமாக்குவது, தங்களுக்குத் தேவையான தடுப்பூசி மருந்து களைப் போதுமான அளவில் பெறுவதற்காக தயாரிப்பு நிறுவனங்களுடன் பேரம் பேசும் அதி காரம் அளிக்கப்பட்டுள்ள இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் மருந்து வாங்குவதற்கான நிதியை செலவிட வேண்டியிருக்கும்.

இந்தியாவில் இதுதான் மிகமிக வெப்பம் மிகுந்த மாதம் என்பதால், நகரங்களில் ஊரடங் குகள் தோன்றத் தொடங்கியுள்ளன. இரண்டாவது அலை நோய்த் தொற்றுக்கான முடிவு இதுவரை கண்ணுக்குத் தென்படாமலேயே உள்ளது. நிர்வாகம் மேற்கொள்ள உள்ள நியாயமான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்து கொண்டுதான் வரும். நூறுகோடிக்கு மேல் மக்கள் உள்ள ஒரு நாட்டில் தடுப்பூசி மருந்தை விரைவில் போடுவது என்பது நடைமுறையில் எப்போதுமே அந்த அளவுக்கு சாத்தியமானதாக இருப்பது அல்ல.

ஆனால், சற்று முன் யோசனை செய்து, திட்டமிட்டு செயல்பட்டிருந்தால்,  இப்போது தவிர்க்க இயலாதவை என்று தோன்றும் குழப் பங்கள் மற்றும் கலவரங்களைத் தவிர்த்திருக் கலாம். கோட்பாடுகளை விட தீர்வுகளையும் விளைவுகளையும் பற்றியே அதிகமாக சிந்தித்துக் கையாள்வதும்,  அவ்வாறு செய்வதற்குத் தயாராக இருப்பதும், அரசும் ஆளுங்கட்சியும் சுய விளம்பரம் செய்து கொள்வதைக் காட்டிலும் அதிகமான நம்பிக்கையை மக்களின் மனதில் ஏற்படுத்தும்.

நன்றி: 'இந்து' ஆங்கில நாளிதழின் தலையங்கம் - 21.04.2021

தமிழில்: .. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment