குருமூர்த்திக்கு அவரின் குருநாதர் பதில்

 கருப்புச் சட்டை போட்டு சபரிமலை போவதுதீ மிதிப்பதுஅலகு குத்துவதுமொட்டை அடிப்பதுபழனிக்குக் காவடி எடுப்பது பெருகிவிட்டதுதிராவிட சிந்தனைக்கு ‘டாட்டா’ காட்டி விட்டனர் மக்கள் என்று குருமூர்த்தி எழுதுகிறாரே! - அதைப் பற்றி அவரின் குருநாதரான காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் என்ன கூறுகிறார்...

பத்துப் பதினைந்து வருடங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறையத் தென்படுகின்றதுஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும்வியாதிகளும் நிறைய இருக்கின்றனஇவைகள் நிறைய வர வரப் பக்தியும் மேன்மேலும் வளருகிறதுஇவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும்கூட துக்கங்களும்வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணங்கள் என்னஓரளவு நமக்குக் கடவுள் பக்தி இருந்தபோதும் 'பேராசையும் ஒழுக்கமின்மையும்சுயநலமும்அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன.”

காஞ்சியிலே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அன்றைய ஜூனியர் சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதியார் பேசிய பேச்சுதான் இது. ('தினமணி' - 7.9.1976)

பக்தி பெருகிப் பயனில்லைபேராசையும் ஒழுக்கமின்மையும் அதிகரித்து விட்டது என்று புலம்பும் சங்கராச்சாரியாருக்கு கு.மூர்த்தி என்ன பதில் சொல்லப் போகிறார்?

 

Comments