இவர்கள் யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 10, 2021

இவர்கள் யார்?

தி.மு..வின் வரலாற்றை திராவிட இயக்க ஆய்வாளர் மானமிகு .திருநாவுக்கரசு அவர்கள் பல தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார்அதனை தி.மு.தலைவர் தளபதி மு..ஸ்டாலின் வெளியிட்டார் என்பதை வைத்துக் கொண்டு தி.மு..வின் கொள்கைகளை நினைவூட்டும் தி.மு..வின் சரித்திரத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டதும் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் தான். (‘துக்ளக்‘, 5.7.2017, பக்கம் 12, 13)

தி.மு..வின் சரித்திரத்தை எழுதினால் குருமூர்த்தி களுக்கு குடைச்சல் எடுப்பானேன்தி.மு.எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதை இந்தக் கூட்டத்தைக் கேட்டுதான் செயல்பட வேண்டுமாஇந்த அதிகாரத்தை இவாளுக்குக் கொடுத்தது யார்?

திராவிட இயக்கத்தின் சரித்திரத்தை இளைஞர்கள் தெரிந்து கொண்டால் - ஆரிய பார்ப்பனக் கொட்டங்களைப் புரிந்து கொண்டால் அது தங்கள் ஆதிக்கப்புரியின் மீது விழுந்த மரணஅடியாக மாறிவிடுமே என்ற அச்சம்தானே இதற்குக் காரணம்!

அருந்தொண்டாற்றிய அந்தணர்கள்!’ வரலாற்றை தாம்ப்ராஸ் (பார்ப்பனச் சங்கம்வெளியிடலாம் - அதனை சங்கராச்சாரியார் வெளியிடலாமாம் -அந்நிகழ்ச்சியில் “கடவுளுக்கு மேலே ‘பிராமணர்கள்’ என்று சங்கராச்சாரியார் பேசலாமாம்ஆனால் திராவிட இயக்க வரலாற்றை மட்டும் எழுதக்கூடாதாம்! ‘ஒரு குலத்துக்கொரு நீதி’ என்னும் மனுதர்மப் புத்தி இவர்களை விட்டு ஒழியும் வரை திராவிட இயக்கத்திற்கு வேலை உண்டுதானே!

 

No comments:

Post a Comment