இந்திய தொழிலதிபர் யூசுப் அலிக்கு அய்க்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

இந்திய தொழிலதிபர் யூசுப் அலிக்கு அய்க்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது

அமீரகம், ஏப். 13- இந்தியாவைச் சேர்ந்த தொழில திபரும் லூலூ குழுமத்தின் தலைவருமான யூசுப் அலிக்கு அய்க் கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டுள்ளது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இவ்விருதை வழங்கி கவுரவித்தார்.

கேரளாவைச் சேர்ந்த தொழில திபரான யூசுப் அலி (65), அபுதாபியில் வர்த்தகம் சார்ந்த பணிகள் மற்றும் தொழில் துறையில் மிக முக்கியமான பங்களிப்பை ஏற்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

விருதை வழங்கி இளவரசர் ஷேக் முகமது பேசியதாவது: அய்க்கிய அரபு அமீரகத்தின் புராதன கலா சாரம் இதை உருவாக்கிய ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுக்குப் பிறகும் தொடர்கிறது. மனித நேயம், அன்பு, பிறருக்கு உதவும் ஈகைக் குணம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர். இத்தகைய குணங்கள் இன்றளவும் தழைத்து நிற்பதற்கு நாம் கலாசார ரீதியாக மனித நேயத்தை மறக்காதவர் களாக விளங்குவதுதான் காரணம். இந்தவிழாவில் 12 தனி நபர்கள், அவர் களது சிறப்பான செயல்பாடுகளுக்காக கவுரவிக்கப்படு கின்றனர். இவர்கள் அனைவருமே தன்னலமற்ற சேவை மூலம் நமது சமூகம் வலுப்பட பாடு பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

விருது பெறும் தனி நபர்கள் அவரவர்கள் துறை மட்டுமின்றி மருத்துவம், சுகாதாரம், சமூக சேவை உள்ளிட்டவற்றில் தங்களை ஈடுபடுத் திக் கொண்டவர்களாவர் என்று குறிப்பிட்டார்.

மிகவும் பெருமையான, உணர்வு ரீதியில் மகிழ்ச்சியான தருணமிது என்று விருது பெற்ற பிறகு யூசுப் அலி குறிப்பிட்டார்.

விருது பெற்றதை தனது சொந்த மண்ணில் உறவினர்களுடன் கொண் டாட கேரளாவுக்கு வந்த தொழிலதி பர் யூசுப் அலி, ஹெலிகாப்டர் விபத் தில் சிக்கினார். இருப்பினும் ஹெலி காப்டரில் பயணித்த யூசுப் அலி, அவ ரது உறவினர்கள், பைலட் உள்ளிட்ட 7 பேரும் உயிர் தப்பினர். தற்போது இவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

குபோஸ் மைதானத்தில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர், அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இறங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மிகுந்த சப்தத் துடன் தரையிறங்கிய இந்த ஹெலி காப்டர், சாலையோரம் இருந்த சக தியில் பாதிக்கும் மேலாக மூழ்கியது. விபத்து நடந்த இடத்திலிருந்து 20 மீட்டர் தூரத்தில்தான் யூசுப் அலி யின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment