ம.ஜ.த. சட்டமன்ற உறுப்பினரை பா.ஜ.க.வுக்கு இழுக்கப் பேரம்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 4, 2021

ம.ஜ.த. சட்டமன்ற உறுப்பினரை பா.ஜ.க.வுக்கு இழுக்கப் பேரம்....

 எடியூரப்பாவிடம் விசாரணை நடத்தநீதிபதி குன்ஹா அமர்வு அனுமதி

பெங்களூரு,ஏப். 4 மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சி சட்டமன்ற உறுப்பினரை பாஜகவுக்கு இழுக்கபேரம் பேசியது தொடர்பான வழக் கில், முதல்வர் எடியூரப்பா விடம் விசாரணை நடத்தலாம் என்று கருநாடக உயர் நீதி மன்றம் அனுமதி வழங்கியுள் ளது.

கருநாடக மாநிலத்தில் 2018 மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மஜத - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. எச்.டி. குமாரசாமி முதல்வரானார். சுமார் 14 மாதங்கள் அவர்முதல்வராக இருந்தார்.

இந்நிலையில், ஆபரேஷன் தாமரை என்ற சதித்திட்டம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் இறங்கிய பாஜக, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேரை பேரம்பேசி தங்கள் பக்கம் இழுத்தது. அவர்களின் சட்ட மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வைத்தது. இதில் குமாரசாமி அரசுபெரும் பான்மை இழந்த நிலையில், பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதல்வரானார்.

அப்போது, குருமிட்கல் தொகுதிமதச்சார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏ நாகன கவுடா கந்தகூரு-வை பாஜக வுக்கு இழுப்பதற்காக, நாகன கவுடாவின் மகன் சரவண கவுடாவிடம் முதல்வர் எடி யூரப்பா பேரம் பேசிய ஒலிப் பதிவு ஆதாரம் ஒன்று வெளி யாகி பரபரப்பை ஏற்படுத் தியது.

சரவண கவுடா அளித்த புகாரின் பேரின் எடியூரப்பா உள்ளிட்டோர் மீது அப் போதே தேவதுர்கா காவல் நிலையத்தில்  முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப் பட்டது.ஆனால், முதல்வரான எடியூரப்பா பின், தன்மீதான இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி, கருநாடக உயர்நீதி மன்றத்திற்கு ஓடினார். விசாரணைக் கும் அவர் தடை கோரினார்.நிலுவையில் இருந்துவந்த இந்த வழக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அமர்வு முன்பு 31.3.2021 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா, மனுதாரர் (எடியூரப்பா) மீதான குற்றத்தில் ஒலிப்பதிவு ஆதாரங்கள் தெளிவாக இருப் பதால், அவரிடம் விசாரணை நடத்துவது அவசியம்.

எனவே, வழக்கை ரத்து செய்யக் கோரி மனுதாரர் தாக்கல்செய்துள்ள மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்வ துடன், முறைப் படிஅவரிடம் காவல்துறையினர்  விசாரணை நடத்துவ தற்கும் அனுமதி வழங்குகிறது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment