ஜனநாயகத்தை அரித்துத் தின்றுகொண்டிருக்கும் தொற்று நோய்க் கிருமிகளை உறுதியுடன் முழுமையாக அழித்து விட வேண்டும்

எம்.கே.நாராயணன்

 உலகின் பல்வேறுபட்ட துறைகளிலும் பரந்த எண் ணிக்கை கொண்ட பாதிப்புகள் 21 ஆம் நூற்றாண்டில்  தோன்றின. எடுத்துக் காட்டாக 2007- 2008 ஆம் ஆண்டில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதைக் கூறலாம். அந்த நெருக்கடியில் இருந்து மீள்வது என்பது மிக மெதுவாக அல்லது இங்குமங்கும் ஒரு சில நாடுகளில் மட்டுமே நடைபெற்றது. அப்போதிலிருந்து, நாட்டின் பொருளா தாரத்துக்கு மட்டுமன்றி, உலகெங்கும் உள்ள மக் களுக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் பேரழிவை ஏற்படுத்த இயன்ற, ஒன்றுடன் மற்றொன்றுக்கு தொடர்பற்ற, தீய விளைவுகளை ஏற்படுத்த இயன்றஒரு தொடர் போன்ற நெருக்கடிகள் ஏற்படவுமே செய்தன.

கடந்த கால நினைவுகளை மறுஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்தல்

உலகின் பல்வேறு கண்டங்களிடையே தொடர்ந்த அரசியல் மற்றும் உத்திகளுக்கு நெருக்கடி ஏற்பட்டதை யும் நாம் கண்டோம். மலை போல குவிந்து கிடக்கும் பொய்யான செய்திகளில் இருந்து பொய்யான தகவல் களும், திரித்துக் கூறப்பட்ட தகவல்களும், ஒரு திட்டமிடப்பட்ட முறையில், பலகோண நெருக்கடியை உலகம் எதிர் கொள்ளவேண்டியுள்ளது என்ற எண் ணத்தை உருவாக்கின. அவற்றால் ஏற்பட இயன்ற மோசமான பின் விளைவுகளை ஊகித்து உரைப்பது என்பது இயலாததே ஆகும்.

இன்றிருக்கும் கட்சி அடிப்படையிலான ஜனநாயகம் எந்த அளவுக்கு எளிதில் நொறுங்கிப் போக இயன்றது என்பதை சந்தர்ப்ப சூழ்நிலைகள் எடுத்துக் காட்டு வதுடன், புதிய புதிய நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு தேசங்களையும் நாடுகளையும் தள்ளும்போது, அவை கோபம் அடைவது என்பதே ஒரு முக்கியமான அம்சமாக ஆகிவிடுகிறது. மிகப் பெரிய அளவிலானதொரு மறு ஆய்வினை அந்த சூழ்நிலை உருவாக்குவதுடன்,அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வுடன் கூடிய தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பெரும்பான்மையான மக்களுக்கு நல் வாழ்வு அளிப்பதை  உறுதிப்படுத்திக் கொள்வதற்குத் தேவை யான அதிகாரத்தையும், பாமர மக்களின் கருத்து களையும், நலன்களையும் ஆதரிக்கும் ஜனநாயகப் போக்குகளின் சரியான அளவிலான கலவையைக் கண்டறிவது என்பது அவ்வளவு எளிதானதன்று. அதில் உள்ள கவலைகள் என்னவென்றால், ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் ஒரு சிறு குழு ஆட்சியாளர்கள் அதிகாரம் பெறுவதற்கு அது உதவும் என்பதுடன்,  ஜனநாயகத்தைப் பாது காப்பவர்கள் என்று கூறிக் கொள்ளும் அதிக அள விலான அதிகாரங்களையும் அனுகூலங்களையும் பெற் றிருக்கும் மேல்தட்டு மக்கள் குழுவை உருவாக்குவதற்கும் அது வழி  வகுத்துவிடும்  என்பதுதான்.

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நியாயமான தேர்தல்கள்

நாட்டில் அண்மையில் காணும் போக்குகள் அத் தகைய கவலைகளை ஏற்படுத்துபவையாக உள்ளன. எடுத்துக் காட்டாக, அண்மைக் காலங்களில் தேர்தல் என்பது, அது ஒரு பெரிய மாநிலத்தில் நடப்பதாக இருக்கட்டும் அல்லது நடுத்தர அளவு மாநிலத்தில் நடைபெறுவதாக இருந்தாலும் சரி, யூனியன் பிர தேசத்தில் நடைபெறுவதாக இருக்கட்டும், அதிகாரத் தைப் பெறுவதற்காக,  கட்டுப்பாடே அற்ற ஒரு போர்க் களம் போன்றதாகவே  ஆகிவிட்டதைக் கூறலாம். நாட்டில் நிலவும் பிரச்சினைகள் அல்லது தங்களின் கொள்கைகளை எடுத்துக் கூறுவதற்கு மாறாக, எதிர்க் கட்சிகள் மீது அதிக அளவில் வசைமாரி பொழிவது என்ற அளவிலேயே தேர்தல் பரப்புரை வளர்ந்து வருகிறது. இரு பொருள்பட ஆபாசமாகப் பேசுவது, எதிர்க்கட்சிக்காரர்களைப்பற்றிய தனிப் பட்ட குறை களைத் தெரிவிப்பது ஆகியவை அரசியல் விவாதங் களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கட்சிகள் பெற்றுள்ள அளவுக்கதிகமான பணபலம் வெளிப் படையாக அனைவருக்கும் தெரிவதாகவே இருக்கிறது. பல பகுதிகளில் வன்முறைச் செயல்களை நடத்துவது என்பது தேர்தல் பரப்புரை என்ற சங்கீதத்தின் ஒரு ராகமாகவே ஆகிவிட்டது. இதில் மிகமிகப் பெரிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது, தேர்தல் களை சுதந்திரமானவும், நேர்மை யாகவும் நடத்துவது என்ற கோட்பாடுதான். தேர்தலின் முடிவுகள் வாக் காளர்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றனவா என்ற கவலைகள் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு நீண்ட காலம் கழிந்த பிறகும்,  தேர்தல் முடிவுகளின் பாதிப்பு தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.

இன்றைய தேர்தல்களில் அரசியல் கட்சிகளால் மேற் கொள்ளப்படும் அளவுக்கு அதிகமான செயல்பாடு களைப் பற்றி ஒரு விவாதம் மேற்கொண்டாலும் கூட,  அது ஒரு நீண்ட கால உண்மை நிலையை பிரதி பலிப்பதாக இருக்காது. இந்த சூழ்நிலைகள் எல்லாம் மாறி, தேர்தல் நடைமுறைகள் முன்பு இருந்த பழைய நிலைக்கே திரும்பும் என்று நம்புவதும் அவ்வளவு எளிதாக இல்லை. அத்துடன் இவை எல்லாம் விரைவில் மறந்து போய்விட இயன்ற வெறும் இருண்ட அத் தியாயங்கள்தான் என்று கூறுபவரும் உள்ளனர். இவை மட்டும் உண்மையானவையாக இருந்தால், அவற்றை யெல்லாம் முடிவுக்கு வந்துவிட்ட அத்தியாயங்கள் என்று கருதப்படவும் இயலக்கூடும். ஆனால் நம் நாட்டைப் பொருத்தவரையில் அப்படி எதுவும் நடக்கப் போவதாகத் தோன்றவில். அதனால்,  இந்த புதிய உண்மை நிலையைக் கையாள வேண்டியவர்களாகவே நாம் இருக்கிறோம். இதற்கு, ஜனநாயக வழிகளை அல்லாமல், எதேச்சதிகார நடைமுறைகளையே அதிக அளவில் சார்ந்து இருப்பதாக அது இருக்க வேண்டும்.

தன்னைத் தானே ஒரு கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுதல்

சட்டம் -ஒழுங்கு பிரச்சினையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நாடு இந்தியா என்று உலகின் பல்வேறுபட்ட நாடுகளிடம் பெருமை கொள்வதன் மீது மிகப் பெரிய அளவிலான அவப்பெயரும், களங்கமும் ஏற்பட்டி ருப்பதை அண்மையில் நாம் அனைவரும் வெளிப் படையாகப் பார்த்தோம். பெரிய அளவில் பாதுகாக் கப்பட்ட மும்பை பெருநகரப் பகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரின் வீட்டுக்கு அருகில், ஒரு வாகனத்தில் கில்லட்டின் வெடிமருந்துக்  குச்சிகள் கேட்பாரற்றுக் கிடந்ததைக் கண்டு பிடித்த நாள் முதற்கொண்டு நடந்து வரும் நிகழ்வுகளை எந்த விதமான  காரண, காரியத்தைக் கொண்டும் நியாயப் படுத்த முடியாது.

மிகப்பெரிய அளவில் பாதுகாக்கப்பட்ட இந்திய பெருநகரக் குடியிருப்பு ஒன்றின் அருகில் யார் இந்த கில்லட்டின் வெடிமருந்துக் குச்சிகளை வைத்திருக்க முடியும் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக மும்பை காவல்துறை இன்றளவும் நேர்மையான முயற்சி எதனையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு வெடி மருந்தை வைத்திருப்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று அதனை வைத்தவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அது மெய்ப்பிப்பதாகவே தோன்றுகிறது. வெடிமருந்துக் குச்சிகளை வெடிக்கச் செய்வதற்கான கருவியை வைக்காமல், வெடிமருந்துக் குச்சிகளை மட்டுமே காரில் வைத்துவிட்டு சென்றதன் நோக்கம் நிறைவேறி விட்டதா? அதற்கு மாறாக,  அரசியல் பிரிவு மக்கள், வியாபாரிகள், காவல்துறையின் அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் இடையே அனைவராலும் சுதந்தரமாகப் பேசப்படும் ஒரு பேசு பொருள் என்ற வகையில் அதன் மீது முழு கவனமும் செலுத்தப்பட்டது.

தற்போது நாம் எதிர்கொண்டுள்ள உயிர் வாழ் வதற்கான   நெருக்கடியின் உண்மையான ஒரு பிரதி பலிப்பில், ஒரு முக்கியமான வில்லன் கீழ் நிலையில் உள்ள ஒரு உதவி காவல்துறை ஆய்வாளரான வாஸே என்பவர். எந்த ஒரு நிகழ்வையும் தங்களுக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொள்ளும் காவல் துறையின் நடைமுறைகள் மட்டுமல்லாமல், அவற்றில்  உள்ள  அர சியல், சமூக மற்றும் சட்டம்-ஒழுங்கு நடைமுறைகளின் அனைத்து அடுக்குகளுமே தவறாக ஆகிப் போனதற்கு எடுத்துக் காட்டாக விளங்குபவர் என்பது இப்போது மிக நன்றாகவே தெரிந்துவிட்டது. ஒரு முனை மட்டுமே வெளியில் தெரியும் ஒரு மிகப்பெரிய  பனி மலை அளவிலான ஆபத்து என்றே இந்த மும்பை நிகழ்ச்சி பார்க்கப்பட வேண்டும். இது மும்பை நகரத்தோடு மட்டுமே நின்றுவிடாமல், மகாராட்டிர மாநிலத்தைக் கடந்த மற்ற இந்திய மாநிலங்களிலும் விரிவடைந்து இருப்பதாகும். நாம் இப்போது நின்றுகொண்டிருக்கும் மண்ணின் பரப்பளவை மட்டுமே நம் ஒவ்வொருவராலும் பெற்றிருக்க இயலும்... விரைவில் நீ இறந்து போன பிறகு, உன்னைப் புதைப்பதற்குத் தேவையான அளவு நிலம் மட்டுமே உனக்கு சொந்தமாக இருக்கும் என்று கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாண்டருக்கு ஒரு துறவி அளித்த அறிவுரையை உதவிக் காவல்துறை  ஆய்வாளர் வாசே பின்பற்றியிருந்தால் அது அவருக்கு நன்மையே செய்திருக்கும். மகாராட்டிரமும், மும்பையும் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இழிவைத் தவிர்த்திருக்கக் கூடும்.

இதிலிருந்து தெளிவாகவும் பலமாகவும் தெரிவது என்னவென்றால், நாட்டின் அனைத்து நிலைகளிலும்  அரசியல், சமூக, சட்டம் -ஒழுங்கு நடைமுறைகள் எந்த அளவுக்கு மோசமாக  ஆகியுள்ளன என்பதுதான்.  அதி லும் மிகமிக மோசமானது என்னவென்றால் இவை அனைத்தையும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இருவரும் ( இரு கட்சிகளும்), பெரும்பாலான மக்களும் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதுதான். இந்த நிலை யில் தான் இருவர்கள் இருவரும் பல ஆண்டு காலமாக இப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

காவல்துறையின் ஒழுக்க நெறி எந்த அளவுக்குக் குறைந்து இருந்த போதிலும், பெரும்பாலும் நித்தம் நித்தம்  நடைபெறும்  இது போன்ற  அத்து மீறல்களின் விரும்பத் தகாததொரு உண்மை நிலையை வெளிப்படுத் தும் நிகழ்வுகளைப் பற்றிய தகவல்கள்  அண்மையில் நம்மை தொடர்ந்து  எதிர்கொண்டு வெளிவந்த வண்ண மாக இருக்கின்றன. சமூகக் கலவரங்கள் அல்லது இதர வன்முறைகள் நேரும் சில நெருக்கடியான நேரங்களில் நிலை நிறுத்தப்பட்ட சட்ட விதிகள் கடைப்பிடிக்கப் படாமல் போவது வழக்கமே என்றாலும், இந்த நிகழ்வில் ஈடுபட்டிருக்கும் தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறான செயல்களின் அளவு காவல்துறையை மட்டுமன்றி, ஒட்டு மொத்த ஆட்சி நடைமுறையையே இழிவு படுத்துபவைகளாக இருக்கின்றன. அது எதனைச் சுட்டிக்காட்டுகிறது என்பதை எவர் ஒருவர் வேண்டு மானாலும் ஊகித்துக் கொள்ளலாம். ஆனால் நிச்சயமான நிலை என்று எதனை அது காட்டுகிறது  என்றால்,  நமக்கு போக்கிடமே இல்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. இன்று நாம் எதிர்கொண்டுள்ள உண்மை யான உயிர் வாழ்தலுக்கான நெருக்கடி இதுதான்.

மாறுபட்ட விதத்திலான ஒரு கூட்டணி

அதனால் ஒரு புதிய வகையிலான செயல்திட்டத்தை  நாம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கக்கூடும். எது நல்ல காவல்துறை செயல்பாடு என்பதைப் பற்றியோ  அல்லது காவல் துறையுடன் சமூகம் எத்தகையதொரு உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியோ  வரையறை செய்வது இனியும் தேவையற்றது. தவறு செய்துள்ளார்கள் என்று நன்றாகத் தெரியும் காவல் துறை அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்கு முன்வராமல் இருப்பதற்கும், சரியான கொள்கைகளுக்காக இறுதி வரை உறுதியாக இருப்பதற்கும் துணிவு மிகுந்த காவல் துறைத் தலைமை தேவை. ஆனால் நாட்டில் நிலவும் சூழ்நிலையோ இவற்றையெல்லாம் கடந்து சென்று விட்டது.

அதன் விளைவாக புதிய புதிய மாற்று திட்டங் களையும், செயல்பாடுகளையும் தேடிக்காண வேண்டிய தேவை நமக்கு உள்ளது. காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டியுள்ளது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டும், ஒட்டு மொத்த காவல் துறை நிர்வாக இயந்திரத்தையும் தலைகீழாக மாற்றி அமைப்பதற்காக மற்றொரு அதிகாரிகளின் ஆய்வுக் குழுவை நியமிப் பதோ, மற்றொரு பேரழிவு வருவதற்கான முன் னோட்டமே ஆகும். இது போன்றதொரு சிந்தனை முதன்முதலாக தோன்றும் அசலான சிந்தனையோ அல்லது புரட்சியோ அல்ல. காவல்துறையினர் தங்களைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் சமூகத்தினர் விரும்பும் வகையில் சில விஷயங்களில் கட்டாயமாக செயல்படுவதற்கு நிர்பந்திக்கப்படும் சூழ்நிலை நிலவும் போது,  காவல் விசாரணைஆணையங்களால் அந்த சூழ்நிலையை மாற்றிவிட முடியாது. இந்த சூழ்நிலையில், அரசியல்வாதிகள், அதிகாரம் பெற்றுள்ள  அல்லது அதிகாரம் பெற்றுள்ளதாகக் கருதப்படும் அரசு அதி காரிகள் ஆகிய ஒவ்வொருவரும் தங்களது விருப்பத் திற்கு ஏற்ப வளைக்கப்பட இயன்ற ஒரு காவல்துறைப் படை தங்களிடம் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். காவல்துறை செயல்பாட்டின் மீது மட்டுமல்லாது, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தின் மேலும் மனித உடலை விட மிகப் பெரிய அளவில் இருண்ட நிழல் விழச் செய்யும் பரவலான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளும் இத்துடன் சேர்ந்து கொள்கிறன. அதனால், காவல்துறை அதிகாரிகளின் அதிகாரத்தையும், அவர்களது மிகைப்பட்ட செயல்பாடுகளையும் பொருத்தவரை, உச்சநீதிமன்றத்தின் எந்த ஒரு பரிந் துரையோ அல்லது  உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெறும் எந்த ஒரு புலன் விசாரணைக் குழுவை நியமிப்பதோ, உண்மையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது.

அதனால், நாம் செய்ய வேண்டியதோ அல்லது செய்ய முயற்சிக்க வேண்டியதோ என்னவென்றால்,  மக்கள் மற்றும் அமைப்புகளின் முறைசாராக் கூட்டணி ஒன்று,  அவர்களது கோட்பாடுகளும் ஆர்வங்களும் என்னவாக இருந்த போதிலும், உருவாக்கப்பட வேண் டும். இந்தக் கூட்டணியில் பெரிய பெரிய வியாபாரிகளும் தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் சேர்க்கப்படக் கூடாது.  இந்தக் கூட்டணியில் சேர்ந்தவர்கள்,  மிகமிகப் பெரியதொரு நீரோடையைப் போன்ற  உணர்வு கொண்ட பொதுமக்களுடன் இணைந்து பொது நல  உணர்வு கொண்ட செயல் பாடுகளையும், பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மிகமிக முக்கியமாக, தொடர்ந்து மேற்கொள்ளப்படு வதற்கு அனுமதிக்கப்பட்டு வரும், அளிக்கப் பட்டுள்ள அதிகார வரம்புக்கு மீறிய செயல்பாடுகளுக்கு எதிராக ஒரு தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் தொடங் கப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்படட வேண்டும்.  இதன் மூலம், மக்களாட்சியையும், மக்களாட்சி தொடர் பான செயல் முறைகளையும், செயல்பாடுகளையும் அரித்துத் தின்று கொண்டிருக்கும் தொற்று நோய்க் கிருமிகளை உறுதியுடன் முழுமையாக அழித்துவிட வேண்டும். அத்தகையதொரு இயக்கத்தைத் தொடங்கி நடத்துவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. ஆனால், நமது நாட்டின் ஜனநாயக நடைமுறை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால்,  இது போன்ற உண்மையான மாற்று செயல்பாட்டு திட்டங்களை மேற்கொள்வது பற்றிய பரிசீலனையை நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.

நன்றி: ‘தி இந்து', 7.04.2021

தமிழில் : ..பாலகிருட்டிணன்

Comments