செய்தியும், சிந்தனையும்....!

 இதுதான் இந்தியா!

*         ரூ.1001 கோடியில் சொகுசு பங்களா ஒன்றை மும்பையில் வாங்கியுள்ளார் - டி.மார்ட் எனும் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தமானி.

>>           கோடிக்கணக்கான மக்கள் தெருக்கோடிகளில் - நடைபாதைகளில் வாழும் மக்கள் ஒரு பக்கம் - இப்படியும் இன்னொரு பக்கம்.

வச்சுக்கிட்டா வஞ்சனை!

*          தி.மு..வும், ...தி.மு..வும் ஏடுகளில் விளம்பரங்கள்.

>>           .தி.மு.. விளம்பரம் தி.மு..வைக் குறை கூறுவது. தி.மு.. விளம்பரமோ தங்கள் திட்டங்களை விளம்பரப்படுத்திக் கூறுவது.

கையில் சரக்கு இல்லாதவர்கள் குறை கூறித்தான் தீர்வார்கள்.

குற்றம் உள்ள நெஞ்சு

குறுகுறுக்கும் என்பது பழமொழி

*          தி.மு.. குற்றம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

- தளபதி மு..ஸ்டாலின் கேள்வி

>>           தான் திருடி பிறரைத் திருடி' என்பார் என்பது நம் நாட்டுப் பழமொழி. அது .தி.மு..வுக்கு மிகவும் பொருந்தும்.

ஆயிரத்தில்

ஒரு வார்த்தை

*           மத்திய பா...விடமிருந்து .தி.மு..வை மீட்க தி.மு.. கூட்டணி வெற்றி பெறவேண்டும்.

- இரா.முத்தரசன், மாநில செயலாளர், சி.பி.அய்.

>>           இதனைத் தான் செல்லும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லி வருகிறார்.

நல்லாதான் சொன்னார்!

*           தமிழ்நாட்டில் மீண்டும் நல்லாட்சி அமைய வாக்களியுங்கள்!

- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

>>           நல்லாட்சியா? அப்படி என்றால் வாக்கு தி.மு..வுக்குத்தான்.

இப்ப மட்டும் என்ன வாழுது?

*           அரசியலுக்கு இடையூறாக இருந்தால், சினிமாவை விட்டு விலகி விடுவேன்.

- நடிகர் கமலகாசன்

>>           சினிமா ஓய்வுக்குப் பிறகுதானே அரசியலில் குதித்திருக்கிறார்.

ஞாபகம் வருதே,

ஞாபகம் வருதே!

*          புதுச்சேரியில் 144 தடை - பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை என்றால், உத்தரவு ரத்து செய்யப்படும்.

- சென்னை உயர்நீதிமன்றம்

>>           தமிழ்நாட்டில் 144 தடை போட்டு பண பட்டுவாடா நடந்ததே!

பூத்' கேப்ச்சரிங்கா?

*           தமிழ்நாட்டில் 10,727 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை.

- தேர்தல் ஆணையர்

>>           பதற்றம் என்றால் அதன் பொருள்  கலவரமா? பண பட்டுவாடாவா?

எல்லோரும் இந்நாட்டு

மன்னர்கள்

*          தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 இடங்களுக்குப் போட்டியிடுவோர் எண் ணிக்கை 4220. கரூரில் அதிகபட்சமாக 77 பேர்.

>>           இதன் பின்னணியில்கூட அரசியல் இருக்கக் கூடும்.

காலத்தின் குரல்!

*           பா...வுக்கு எதிரான ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

- மேற்கு வங்க முதல்வர் மம்தா

>>           சேலத்தில் ராகுலை அருகில் வைத்துக்கொண்டு தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கூறிய கருத்தின் எதிரொலி!

ஆம், காலத்தின் குரல்!

தேர்தல் நேரத்தில் செத்தவர் பிழைப்பார்!

*           கோவை மாவட்டத்தில் இறந்தவர்கள் பெயரால் தபால் வாக்குப் போட விண்ணப்பம் - அதிகாரிகள் விசாரணை.

>>           தேர்தல் நேரமல்லவா! தேர்ந்தெடுத்த தில்லு முல்லுகள் கோலோச்சுமே!

செத்தவர்கள் சிவலோக பதவி அடைந்து அங்கிருந்து நேராக வாக்களிக்க விரைந்து வருவர் என்று நம்புவோமாக!

Comments