அசாமில் 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 171 வாக்குகள் பதிவு

கவுகாத்தி, ஏப்.6   அசாமில் 90 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்கு சாவடியில் 171 வாக்குகள் பதிவாகி இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அசாமில் கடந்த 1ஆம் தேதி 2ஆவது கட்ட வாக்கு பதிவு நடந்தது.  இதில், திமா ஹசாவ் மாவட்டத்தில் ஹப்லாங் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி ஒன்றில் 171 வாக்குகள் பதிவாகின.  ஆனால், அந்த பூத்திற்கு உட்பட்ட பகுதியில் 90 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களே உள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா...வின் பீர் பத்ரா ஹேக்ஜர் இந்த தொகுதியை வென்றுள்ளார்.  இந்நிலையில், நடந்து முடிந்த வாக்கு பதிவில் 74 சதவீத அளவுக்கே வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதில், 171 வாக்குகள் பதிவாகி உள்ளன என தெரிய வந்தது தேர்தல் ஆணையத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து 6 தேர்தல் அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வாக்கு சாவடியில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது.

 

அரசு சிறப்பு பேருந்துகளில் 5 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஏப்.6 சட்டமன்ற தேர்தலை யொட்டி இயக்கப்பட்ட அரசு சிறப்புப் பேருந் துகளில் 5 லட்சம் பேர் பயணம் மேற் கொண்டதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று (6.4.2021) (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று பொது மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக தேர்தல் சிறப்பு பேருந்துகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்

5-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது.

அந்த வகையில் ஒவ்வொரு நாளும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

அதன்படி, கடந்த 5 நாட்களில் மட்டும் 13 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட தாகவும், அதில் 5 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் பயணித்து இருப்பதாகவும் போக் குவரத்து கழகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

 

2019-2020 நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி.தாக்கலுக்கான அவகாசம் முடிந்தது 

சென்னை, ஏப்.6 2019-2020 நிதியாண் டுக்கான ஜி.எஸ்.டி. தாக்கலுக்கான அவகாசம் மார்ச் உடன் நிறைவடைந்தது. தற்போது, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் இருக்கின்றன. இதில், ஆண்டு முழுவதும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய, படிவம் 9 உள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல், வரவு செலவு உள்ள அனைத்து வணிகர்களும், படிவம் 9 தாக்கல் செய்ய வேண்டும். ரூ.5 கோடிக்கு மேல் வரவு, செலவு உள்ள நிறுவனங்கள், படிவம் 9 மற்றும் 9சி தாக்கல் செய்ய வேண்டும். 2019-2020-ஆம் நிதியாண்டுக் கான, படிவம் 9 மற்றும் 9-சி தாக்கல் செய் வதற்கான அவகாசம் மார்ச் உடன் நிறைவ டைந்தது. தற்போது, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக கரோனா உட்பட, பல்வேறு சூழ் நிலைகள் காரணமாக, ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதில் வணிகர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஏற்கெனவே, பல முறை அவகாசம் வழங்கி, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது. மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால், வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். மேற்கண்ட தகவல்களை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

 

 

Comments