புதுச்சேரியில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைக்கு சரியான விடை காணக்கூடிய நாள்தான் ஏப்ரல் 6. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

புதுச்சேரியில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைக்கு சரியான விடை காணக்கூடிய நாள்தான் ஏப்ரல் 6.

கொள்கை ரீதியாக - லட்சிய ரீதியாக உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பீர்!

மோடி வித்தை இங்கு பலிக்காது

புதுவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

புதுவை, ஏப்.1 புதுச்சேரியில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைக்கு சரியான விடை காணக்கூடிய நாள்தான் ஏப்ரல் 6 ஆம் தேதி. கொள்கை ரீதியாக - லட்சிய ரீதியாக உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட் பாளர்களை புதுவை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து  தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று (31.3.2021) மாலை புதுவைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

ஜனநாயகப் படுகொலை

புதுச்சேரி வாக்காளர்கள் நடந்த ஜனநாயகப் படுகொலைக்கு சரியான விடை காணக் கூடிய நாள்தான் ஏப்ரல் 6 ஆம் தேதி.

இந்தியாவிலேயே நான்கே முக்கால் ஆண்டு கள் முடிந்து, அய்ந்தாண்டுகளுக்கு ஒரு சில மாதங்கள் இருக்கின்ற நிலையில், அதற்காகக் கூட காத்திராமல், நாமினேசன் மூலமாக - அதுவும் சட்ட விரோதமான முறையில் உள்ளே நுழைந்த எம்.எல்..,க்களில் ஆரம்பித்து, மற்றவர்களை யெல்லாம் விலைக்கு வாங்கி, ‘‘ஆயாராம் காயாராம்'' என்ற குதிரை பேரத்தின் மூலமாக  புதுச்சேரியில் நடைபெற்ற சம்பவம் மிகத் தவறான ஒரு முன்மாதிரி.

கொள்கை ரீதியாக, லட்சிய ரீதியாக உள்ள வேட்பாளர்களை....

புதுச்சேரிக்கு ஏற்படுத்திய, ஜனநாயகத்திற்கு ஏற்படுத்திய ஒரு களங்கம். இதைத் துடைக்கக் கூடிய அருமையான வாய்ப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி வருகிறது. அந்த வாய்ப்புக்குக் கொள்கை ரீதியாக, லட்சிய ரீதியாக தி.மு.. - காங்கிரஸ் - இடதுசாரிகள் - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து அவர்களை வெற்றி பெறச் செய்யவேண்டும் புதுச்சேரி மக்கள்.

அதுமட்டுமல்ல, வாக்காளர் பெருமக்களுக்கு ஒன்றைத் தெளிவாகச் சுட்டிக்காட்ட விழைகி றோம்,

இங்கே சில பேர், ‘‘நான்தான் முதலமைச்சர், நான்தான் முதலமைச்சர்'' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் யாரும் முதலமைச்சராக முடியாது;  நாங்கள்தான் முடிவெடுக்கப் போகிறோம் என்று சொல்லி, பா... வேறொரு திட்டத்தோடு இருக்கிறது.

எனவேதான், பரிதாபத்திற்குரிய, முதலமைச்சர் கனவு காணுகின்றவர்களின் நிலை என்ன என்பதையும் வாக்காளர்கள் புரிந்துகொண்டு, அதற்கேற்ப கொள்கை ரீதியாக இருக்கக் கூடிய கூட்டணியை ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மோடி வித்தை

செய்தியாளர்: பிரதமர் மோடிக்கு திடீரென்று பாரதியார் ஞாபகத்திற்கு வருகிறார், திருவள்ளுவர் ஞாபகத்திற்கு வருகிறாரே அதுபற்றி....?

தமிழர் தலைவர்: ஆஹா... ஆஹா.... அவருக்கு திடீரென்று அவ்வையார் ஞாபகத்திற்கு வருவார், திருக்குறள் ஞாபகத்திற்கு வரும். ஆனால், தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த பெருமை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களையே சாரும்.  சமஸ்கிருதம்கூட தமிழ் மொழி யின்மூலமாகத்தான் செம்மொழி தகுதி பெற்றது.

பிரதமர் மோடி இப்படி வேஷம் போடுவதற்கு காரணம்  என்ன?

அப்பேர்பட்ட செம்மொழி நிறுவனத்தை இன்றைக்குச் சிதைத்துவிட்டு, அன்றாட கூலி நிறுவனமாக ஆக்கி விட்டார்கள். வடமொழி சமஸ்கிருதத்தை 130 கோடி மக்கள் தொகையில், வெறும் 25 ஆயிரம் பேர்தான் பேசுகிறார்கள் என்று சொல்கிறார்கள், அதுகூட உண்மை இல்லை; நடைமுறையில் இல்லை.

ஆனால், தமிழ் மொழி பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கிறது. அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை 22 கோடி ரூபாய். அதேநேரத்தில், செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு கடந்த நான் காண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகை 635 கோடி ரூபாயாகும்.

இதிலிருந்தே மோடியினுடைய வித்தை என்னவென்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள் ளலாம்.

மோடி போட்டிருப்பது முகமூடி - அந்த முகமூடியைக் கழற்றினால், அதில்தான் சமஸ் கிருதம் தெரியும், ஹிந்தி தெரியும், மதவெறி தெரியும்.

செய்தியாளர்: தேர்தல் பரப்புரையில் நீங்கள் உரையாற்றும்பொழுது, பா... சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக ஒரு பெண் வருவார் என்றீர்களே, அது யார்?

தமிழர் தலைவர்: அந்தமர்மத்தை' நீங்கள் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு தெரிந்து கொள்வீர்கள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment