‘‘டாட்டா பிர்லா கூட்டாளி- பாட்டாளிக்கோ பகையாளி!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

‘‘டாட்டா பிர்லா கூட்டாளி- பாட்டாளிக்கோ பகையாளி!''

கரோனா மனித வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. நோயினால் மட்டுமல்ல; வருமானம் அறவே வற்றிப் போனதால் அடுத்தவேளை உணவுக்கு அல்லாடிய அவலம் - அவன் தின்ன உணவில்லை; வறுமையோ அவனைத் தின்று கொண்டிருந்தது.

84 விழுக்காடு மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டு திணறியது. 2020 ஏப்ரலில் மட்டும் ஒரு மணிநேரத்தில் ஒன்று புள்ளி 70 லட்சம் பேர் வேலையிழந்து வீதியில் நின்றனர். (கரோனாவால் வீதியில் நிற்கவும் பேரச்சம்!)

ஆனால், அந்த ஊரடங்கு காலத்திலே கோடீஸ்வரர்களின் சொத்தோ 35 விழுக்காடு உயர்ந்தது. 2020 மார்ச் மாதத்தில் இருந்து 100 மடங்கு அதிகரித்துள்ளது.

13 புள்ளி 80 கோடி ஏழை மக்களுக்கு தலா ரூ.94 ஆயிரத்து 45 ரூபாய் அளிக்க முடியும் என்கிறதுஆக்ஸ் பாம்' என்னும் தன்னார்வ நிறுவனம்.

ஒரு சாதாரண தொழிலாளி (எவ்விதத் திறனும் இல்லாதவர்) 10 ஆயிரம் ஆண்டுகள் சம்பாதித்தால் எந்த அளவுக்குச் சம்பாதிக்க முடியுமோ, அதற்கு நிகரான தொகையை ஒரு மணிநேரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி சம்பாதித்துள்ளார். இது கரோனா காலத்து நிலவரம் என்கிறது அந்த அறிக்கை.

மத்திய பா... தலைமையிலான நரேந்திர மோடி ஆட்சி கரோனா காலத்தில்கூட கார்ப்பரேட்டுகளைத் தீனி போட்டுக் கொழுக்க வைத்த ஆட்சி என்பதற்கு வேறு எந்த சான்று தேவைப்படும்?

இவ்வளவுக் கொழுக்கும் கார்ப்பரேட்டுகளுக்குத்தான் கடன்கள் தள்ளுபடி ரூ.68,000 கோடி (ரிசர்வ் வங்கி அறிக்கை, ஜூன் 2020).

மத்தியில் பா... ஆட்சிக்கு வந்த 2014 முதல் இதுவரை கார்ப்பரேட்டுகளுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.7 லட்சத்து 78,000 கோடி (சாகேத் கோகலே என்பவரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல் இது).

ஆனால், வங்கிக் கடனைக் கட்ட முடியாத ஏழை - பாழைகளின் ஆடு மாடுகள் ஜப்தி செய்யப்படும்.

‘‘டாட்டா பிர்லா கூட்டாளி - பாட்டாளிக்குப் பகையாளி!'' என்ற அண்ணாவின் முழக்கம் நினைவிற்கு வருகிறதா?

கார்ப்பரேட்டுகள் கடைகளை இழுத்து மூட பாட்டாளிகள் முகத்தில் புன்சிரிப்பு மலர் பூத்துக் குலுங்க ஆதரிப்பீர் தி.மு.. கூட்டணிக் கட்சிகளையே!

 - மயிலாடன்

No comments:

Post a Comment