6 கோடி தடுப்பூசி, 11 லட்சம் ரெம்டெசிவிரை ஏற்றுமதி செய்தது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

புதுடில்லி, ஏப்.23  கரோனா 2-ஆவது அலை குறித்து முன்பே எச்சரித்தும், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிந்தும், 11 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளையும், 6 கோடி தடுப்பூசி களையும் மோடி அரசு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது ஏன்?என்பது உள்பட பல்வேறு கேள்விகளை பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எழுப்பியுள்ளார்.

ஏஎன்அய் செய்தி நிறுவனத்திற்கு விரிவான பேட்டி ஒன்றை பிரியங்கா காந்தி அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இன்றைய நாளில், நம் மக்கள் தடுப்பூசிக்காகவும், மருந்துக்காகவும், ஆக்சிஜனுக்காகவும், படுக்கைவசதிக் காகவும் கண்ணீர் வடித்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசோ எதைப் பற்றியும் கவலைப்படுவதாக தெரிய வில்லை. மக்களின் கஷ்டம், அவதி குறித்து, உணர்வற்று கிடக்கிறது. அதிகார ஆசையுடன், தேர்தல் பிரச் சாரங்களை முன்னெடுத்து வருகிறது. அதுதொடர்பாக நடக்கும் பொதுக் கூட்டங்களில் கரோனா பற்றிப் பேசி சிலர் சிரிக்கிறார்கள். இதெல்லாம் எப்படி அவர்களால் முடிகிறது? மக்கள் நலனைவிட, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதில்தான் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இன்று நாட்டின் பல மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.. இதற்கு முக்கியக் காரணம், ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்வதற்கு போதுமான போக்குவரத்து வசதியில்லை. 2-ஆவது அலை வரப்போகிறது, நம்மைத் தாக்கப் போகிறது என்றுஏற்கனவே தெரிந்தும்கூட, போக்குவரத்து வசதியை மத்திய அரசு ஏன்,முன்பே செய்யவில்லை. பரவி வரும்2-ஆவது அலையை சமாளிக்க மத்திய அரசு ஏன், சரியான திட்டமிடலை வகுக்க வில்லை?

ஆனால், உலக நாடுகளிலேயே இந்தியாதான் மிகப்பெரிய ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நாடு என்றுசொல்லி பிரதமர் மோடி நடிக்கிறார். அப்படி யென்றால், நமக்கு ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட என்னகாரணம்? இந்த 2-ஆவது அலைகுறித்து, மத்திய அரசு நடத்தியஆய்வில், 2-ஆவது அலை தீவிரமாக இருக்கும் என்று எச்சரித்தும் அரசுஏன் கவனிக்க வில்லை? ஏன் அதைப்புறக்கணித்தது?

இன்றைக்கு 2 ஆயிரம் டிரக்குகளில் மட்டுமே ஆக்சிஜன் கொண்டு செல்லப் படுகிறது. இத்தனைக்கும் நமக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்கிறது. ஆனாலும், அதைக் கொண்டுசெல்ல முடியவில்லை என்பது எப்படிப்பட்ட வேதனை?

இந்த 6 மாதத்தில், 11 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது. குறிப்பாக, ஜனவரி, மார்ச் மாதத்தில் மட்டும் 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இப்படியெல் லாம் செய்தால், நமக்கு பற்றாக்குறை வராதா? இந்த தடுப்பூசிகளைவைத்து, நம் 4 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி போட்டிருக்கலாமே? ஏன் இந்தியர் களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வில்லை?

மோசமான திட்டமிடல்தான் இன்றைய தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம். நிர்வாக திறமையின் மைதான், ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு காரணம். இது ஒட்டுமொத்த மத்திய அரசின் தோல்வி என்றே சொல்ல வேண்டும்.. அதேபோலதான், நாடு முழுவதும் பரிசோதனைகளை தீவிரப் படுத்தவில்லை. எதற்காக தீவிரப் படுத்தவில்லை? எதற்காக, ஆன்டிஜென் பரிசோதனை நடத்தவில்லை?எதற்காக அந்த டெஸ்ட்கள் எண் ணிக்கை குறைத்து காட்டப்பட்டது? காரணம், தாங்கள் கட்டமைத்துள்ள தோற்றம், மரியாதையை அது தகர்த்துவிடும் என்று மோடி அரசுக்கு பயம். அப்படி யானால் மக்களின் உயிர் அவர்களுக்கு முக்கியம் இல்லையா..?

இவ்வாறு பிரியங்கா காந்தி கேள்வி களை எழுப்பியுள்ளார்.

இதனிடையே, பிரியங்கா காந்தி எழுப்பிய குற்றச் சாட்டுக்களை மறுக்காத பாஜக செய்தித் தொடர் பாளர் சம்பித் பத்ரா, மத்திய அரசு ஏற்றுமதி செய்த ஆக்சி ஜனில், மருத்துவ ஆக்சிஜன் வெறும் 4 மெட்ரிக் டன் மட்டுமே என்று விளக்கம் அளித் துள்ளார்.

Comments