தமிழகம் உட்பட 5 மாநிலத்திலும் வாக்குப்பதிவு சரிவு: வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு காரணமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 8, 2021

தமிழகம் உட்பட 5 மாநிலத்திலும் வாக்குப்பதிவு சரிவு: வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு காரணமா?

புதுடில்லி, ஏப்.8 தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 475 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குபதிவானது கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே பதிவாகி உள்ளது. இதற்கு, வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்குவங்கத்தில் 3ஆம் கட்ட தேர்தல் நேற்று முடிந்த நிலையில் வரும் 29ஆம் தேதி வரை இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடை பெற வேண்டியுள்ளது.

நேற்று மட்டும் 5 மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 475 தொகுதிகளில் 1,53,538 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவுசெய்தனர்.

தேர்தல் ஆணையத் தரவுப்படி, மேற்கு வங்கத்தில் (31) 77.68 சதவீதம், அசாமில் (40) 82.28 சதவீதம், தமிழ்நாடு (234) 72.78 சதவீதம், கேரளா (140) 74 சத வீதம், புதுச்சேரி (30) 81.64 சதவீதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.

கரோனா வழிகாட்டல் நெறிமுறை களின்படி  வாக்குப்பதிவு நடை பெற்றதால், 1,000 வாக்குகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற நிலையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டது. அதனால், புதிய வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

ஏற்கெனவே வாக்குப்பதிவு செய்ய செல்லும் வாக்குச் சாவடிக்கு பதிலாக வேறொரு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டிய கட்டாயம் பல வாக்கா ளர்களுக்கு ஏற்பட்டது.

ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வெவ்வேறு வாக்குச்சாவடிக்கு சென்று (வெவ்வேறு இடத்தில் உள்ள பள்ளிகள்) வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், பலர் வாக்களிக்க செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. 

அதேபோல், அசாமில் 2016இல் 86.9, 2019இல் 84.9, 2021இல் 82 சதவீதம், தமிழகத்தில் 2016இல் 74.8, 2019இல் 72.5, 2021இல் 71.7 சதவீதம், கேரளாவில் 2016இல் 77.1, 2019இல் 77.8, 2021இல் 74 சதவீதம், புதுச்சேரியில் 2016இல் 84 சதவீதமாகவும், 2019இல் 82 சதவீத மாகவும், 2021இல் 81.5 சதவீதமாகவும் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதி வானது சரிவை நோக்கிச் சென் றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொல்கத்தாவில் வரும் 26 மற்றும் 29ஆம் தேதிகளில் நடை பெறும் எட்டு சட்டமன்ற தொகுதி களின் தேர்தல் அதிகாரிகளை தலை மை தேர்தல் ஆணையம் அதிரடி யாக மாற்றியது.

சவுயிங்கீ, என்டாலி, பெலியா கட்டா, ஜோராசன்கோ, ஷியாம்புகூர், காசிபூர்-பெல்காச்சியா, கொல்கத்தா துறைமுகம் மற்றும் போவானிபூர் எட்டு தொகுதி அதிகாரிகள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அதே இடத்தில் பணியாற்றுவதால் இட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஏற்கெனவே நான்கு ஆண்டு களுக்கும் மேலாக அதே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இட மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், மாநில அரசு அதனை செய்யாததால் அவர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment