வாக்குச்சாவடி மய்யங்களில் சேகரமான 29 டன் மருத்துவ கழிவுகள் அழிப்பு

சென்னை, ஏப். 8- சென்னை மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளாக செயல்பட்ட பள்ளிகளில் சேகரமான 29 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றி, அழிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,061 இடங்களில், 5,911 வாக் குச்சாவடி மய்யங்கள் அமைக் கப்பட்டன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6.4.2021 அன்று நடைபெற்றது. அப்போது, கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்கள், வாக்களிக்க வரும் கரோனா நோயாளிகள் ஆகியோர் அணிந்துகொள்ள முழு பாதுகாப்பு கவச உடை, முகக்கவசம் உள்ளிட்ட தொற்று தடுப்புக்கான 13 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், வாக்காளர்கள் அனைவருக்கும் பிளாஸ்டிக் கையுறை வழங்கப்பட்டது. அவற்றைச் சேகரிக்க 6 ஆயி ரம் மஞ்சள் நிறப் பையுடன் கூடிய, 70 லிட்டர் கொள்ள ளவு கொண்ட குப்பைத் தொட்டிகளும் வழங்கப்பட் டன. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி இரவே மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மய்யங் களில் இருந்த, கரோனா பரவல் தடுப்புக் கழிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அவற்றை உயிரி மருத்துவக் கழிவாகக் கருதி, அழிக்க உத் தரவிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 29 டன் கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்க அனுப்பப்பட்டன.

தொடர்ந்து, வாக்குச் சாவடிகளாக செயல்பட்ட அனைத்துப் பள்ளி வளாகங் களிலும் மாநகராட்சி சார் பில் நேற்று (7ஆம் தேதி) கிரு மிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டன.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image