தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 5, 2021

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021


மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி?

தேர்தல் ஆணையம் தகவல்

  சென்னை, ஏப்.5 தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறுகிறது. 6ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தந்துள்ள வாக்காளர் தகவல் சீட்டையும், இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 அடையாள ஆவணங்களில் எதை யாவது ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு, முகக் கவசம் அணிந்து, வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சமூக இடைவெளிக்கான வட்டம் வரையப்பட்டு இருக்கும். அந்த வட்டத்திற்குள் வந்து வரிசையில் நிற்க வேண்டும்.

உங்களுக்கான வாய்ப்பு வரும்போது உள்ளே செல்ல வேண்டும். அங்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் இருப்பார் கள். எதிரே, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர் களுக்கான தேர்தல் முகவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் அந்த தொகுதி மற்றும் வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியல் இருக்கும்.

முதல் அலுவலரிடம் உங்கள் பெயர், வார்டு எண் போன்ற வாக்காளர் தகவல் சீட்டில் தரப்பட்டிருந்த தகவல் களைக் கூற வேண்டும். அவர் அதை தன்னிடம் இருக்கும் பட்டியலுடன் சரிபார்ப்பார். உங்கள் பெயர் இருக்கும் பட்சத்தில் அதை சத்தமாக படிப்பார். அதை வேட்பாளர் களின் முகவர்கள் சரிபார்ப்பார்கள்.

அதைத் தொடர்ந்து உங்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 ஆவணங்களில் ஒன்றை அளிக்க வேண்டும். உங்கள் பெயரை டிக் செய்துவிட்டு 2ஆம் அலுவலரிடம் உங்களை முதல் அலுவலர் அனுப்பி வைப்பார்.

அங்குள்ள மேஜையில் உங்களின் இடது கையை வைக்க வேண்டும். அந்த அலுவலர் உங்களின் இடது கை ஆள்காட்டி விரலின் நகத்தையும், தோலையும் இணைத்து மை வைப்பார். அதை துடைக்கக் கூடாது. சில நொடிக்குள் நன்றாக காய்ந்துவிடும். பின்னர் உங்களிடம் ஒரு சீட்டை கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் ஆவணம் ஒன்றில் உங்களின் கையெழுத்தைப் பெறுவார்.

பின்னர் 3ஆம் அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் அந்த சீட்டை பெற்றுக்கொண்டு உங்களின் விரலில் மை இருப்பதை உறுதி செய்வார். கரோனா பரவல் காலம் என்பதால் வலது கைக்கான கையுறையை அவர் வழங்கு வார். அதை கையில் போட்டுக்கொண்டு 4ஆம் அலுவல ரிடம் செல்ல வேண்டும். அவர் நீங்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குப்பதிவு எந்திரத்தை தயார் செய்து வைப்பார்.

உடனே நீங்கள் அட்டைப்பெட்டிகளால் மறைக்கப் பட்டுள்ள இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தயார் நிலையில் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரமும், அதன் அருகே விவிபேட் என்ற நீங்கள் அளித்த வாக்கை உறுதி செய்யும் எந்திரமும் வைக்கப்பட்டு இருக்கும். உங்களுக்கு பிடித்த மான வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள நீல நிற பட்டனை அழுத்த வேண்டும். அப்போது அதன் அருகே இருக்கும் சிவப்பு விளக்கு எரிவதோடு, நீண்டபீப்' சத்தமும் கேட்கும்.

அப்போதுவிவிபேட்எந்திரத்தின் கண்ணாடியாலான சிறிய திரையின் பின்புறம் ஒரு துண்டு தாள் அச்சாகி வரும். அதில் நீங்கள் ஓட்டளித்த சின்னம், எண், பெயர் காணப்படும். இது 7 விநாடிகள் நீடிக்கும். பின்னர் அது எந்திரத்திற்குள் விழுந்துவிடும். உங்கள் வாக்கு சரியான வேட்பாளருக்கு சென்று சேர்ந்ததை இதன் மூலம் உறுதி செய்யலாம்.

வாக்குச்சாவடிகளில் கரோனா விதிகளை அமல்படுத்த ஏற்பாடு

சென்னை,  ஏப். 5  இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் 234 தொகுதிகளில் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 6.28 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தற்போது கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், உரிய பாதுகாப்புக் கவசங்களை அணிந்து, வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கலாம். அதற்கான ஏற்பாடுகளையும் மாநில அரசுகள் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு பணி களுக்காக முகக்கவசம், உடல் கவச உடை, கிருமிநாசினி,உடல் வெப்ப பரிசோதனை கருவி உள்ளிட்டவற்றை வாங்க சுகாதாரத் துறைக்கு தமிழக தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரத சாஹு ரூ.54 கோடி விடுவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சுகாதாரப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடிகளில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தமிழகத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 பேர் வீதம், மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 874 பேர் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக் கான வாக்குச்சாவடிகள் தற்போது ஒதுக்கப்பட்டு வரு கின்றன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களது பணி குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களை போதிய இடைவெளிவிட்டு நிற்க வைத்தல், அவர்களது கைகளில் கிருமிநாசினி தெளித்தல், கையுறை வழங்குதல், முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு முகக் கவசம் வழங்குதல், அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்களிக்க வரும் கரோனா நோயாளிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு கவச உடை வழங்குதல், பின்னர் அதை, பாதுகாப்பாக திரும்பப் பெற்று, அந்த கழிவுகளை உயிரி மருத்துவக் கழிவு விதிகளின்படி அழிக்க அனுப்புதல், மீதமாகும் கவச உடை, முகக் கவசங்களை திரும்ப ஒப்படைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன சேவை தேர்தல் ஆணையம் ஏற்பாடு

சென்னை, ஏப். 5 தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக இலவச வாகன சேவைக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில், இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் நாளன்று ஊபர் நிறுவனம் இலவச சவாரி வழங்குகிறது.

தங்களது ஜனநாயக உரிமையை மக்கள் நிறைவேற்றுவ தற்கும் ஜனநாயகக் கடமையை செயல்படுவத்துவதற்கும் ஏதுவாக முதியோர்கள் (80 வயதிற்குமேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களது இல்லத்திலிருந்து அவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவையை தர "ஊபர்" நிறுவனம், இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.

எனவே, வருகின்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் 2021இல் மேற்படி இலவச சவாரி சேவையை சென்னை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களில் ஊபர் நிறுவனம் வழங்க உள்ளது.

* மேற்கண்ட வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டி லிருந்து வாக்குச்சாவடிக்கு சென்று திரும்பும் வகையில், இலவச சவாரியானது, குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்திற்குட் பட்டு பயணக் கட்டண அளவில் ரூ,200 வரை 100 சதவீதம் கட்டணத் தள்ளுபடியுடன் அளிக்கப்படும்.

* சவாரி செய்வோர் அலைபேசியின் மூலம் "ஊபர்" செயலி வழியாக இலவச சவாரிக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

* எனவே, 80 வயதிற்குமேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விருப்பத்தின்பேரில், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நாளை ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment