‘பெரியாரிசம்' என்பது... (கோவில்பட்டி தொகுதி)

 சீனிவாசனுக்கு எதிராக இங்கே போட்டியிடும் ஒருவர் கடந்த முறை இங்கிருந்து ஓட்டு வாங்கிவிட்டு சென்னைக்கு ஓடிப்போனவர். மற்றொரு வர் அங்கே வெற்றி பெற்று தொகுதி மக்களை சந்திக்க முடியாமல் ஓடி வந்திருப்பவர். ஓடிப்போனவரும், ஓடி வந்தவரும் கோவில்பட்டி மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள்.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில், அம்மாவின் ஆசியுடன்.. என்றுதான் அதிமுக தேர்தல் விளம்பரம் செய்கிறது. மதுரையில் 2 நாட்கள் முகாமிட்ட மோடி, மதுரை வீரன் படத்தை 14 முறை பார்த்ததாக சொல்லியிருக்கிறார். இவை அனைத்துமே டூபாக்கூர் என்பதுமக்களுக்கு தெரியும். ரஜினிக்கு வருமான வரிச்சலுகைகொடுத்தார்கள், வேறுபல சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. தற்போது தேர்தல் நேர பஞ்ச் வசனத்தை தங்களுக்காக பேசுவார் என்கிற நப்பாசையில் தாதா சாகிப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ளது.பாஜக தலை வர் ஒருவர் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் பாஜக போட்டியிடுவது பெரியாரிசத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகத் தான் என்று தெரிவித்துள்ளார். பெரியாரிசம் என்பது தேர்தலுடன் சம்பந்தப்பட்டதல்ல என்பது அவருக்கு தெரியாது. எங்கெல்லாம்  ஜாதிய ஒடுக்குமுறை இருக்கிறதோ, ஆணாதிக்கம் இருக்கிறதோ, பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்கிறதோ, மூட நம்பிக்கை இருக்கிறதோ, கடவுளின் பெயரால் எங்கெல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களோ அங்கெல்லாம் பெரியார் இருப்பார். அதனால்தான் பாஜகவுக்கு திரும்பத் திரும்ப பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.  கள்ளக்குறிச்சியில் அண்ணாசிலை எரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துவோரால் பேச முடியவில்லை. அந்த அளவுக்கு முதுகெலும்பற்றவர்களாக இபிஎஸ்சும்-ஓபிஎஸ்சும் இருக்கிறார்கள்.

கோவில்பட்டியில் சீனிவாசனுக்கு தொகுதி முழுவதும் மகத்தான ஆதரவு இருப்பதும், தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெறவிருக்கிறார்கள் என்கிற செய்திகளும் வந்துகொண்டிருக்கிறது.  கடம்பூர்ராஜு ஓட்டுக் கேட்டுசென்றபோது கோவில்பட்டி வாக்காளர்கள் அவரிடம், குடிநீர், சாக்கடை கால்வாய், சாலை வசதிகளைக்கூட அமைச்சராக இருக்கும் உங்களால் செய்துதர முடிய வில்லையே என்று கேட்டு திருப்பி அனுப்பியுள்ளனர்.

சனிக்கிழமையன்று (3.4.2021) கோவில்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. சீனிவாசனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் .மு.... பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசியது...

- நன்றி: ‘தீக்கதிர்' (5.4.2021)

Comments