ரஷ்யாவின் கரோனா தடுப்பூசி ‘ஸ்புட்னிக் வி’ மே 1ஆம் தேதி இந்தியாவுக்கு கிடைக்கும்

புதுடில்லி, ஏப்.29 ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மே 1ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து சேரும் என தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதன்படி, கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், நாட்டில் சமீப காலங்களாக கரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன.  இந்த நிலையில், ரஷ்யாவின்ஸ்புட்னிக் விதடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்திருந்தது.  இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் 3ஆவது கரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வருகிறது.

ரஷ்யாவில் மட்டுமே இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 59 நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. கரோனாவை தடுப்பதில் 91.6 சதவீதம் அளவுக்கு இந்த தடுப்பூசி வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இந்த தடுப்பூசியை வைத்திருந்து பயன்படுத்த முடியும். ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை அய்தராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. இந்த நிறுவனம் ரஷ்யாவில் இருந்து முதல் கட்டமாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்து தருவதாக கூறி உள்ளது.

ஸ்புட்னிக் விதடுப்பூசியின் முதல் தொகுதி மே 1 ஆம் தேதி இந்தியாவுக்கு கிடைக்கும் என ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியத்தின் தலைவர்  கிரில் டிமிட்ரிவ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கரோனாவை எதிர்கொள்ள - இந்தியாவுக்கு

ரூ.74 கோடி வழங்குகிறது கனடா அரசு

கனடா, ஏப்.29 கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ.74 கோடியை வழங்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

கரோனா வைரஸின் 2ஆவது அலையால் இந்தியா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பில் உலகிலேயே முதலிடத்தில் இந்தியா உள்ளது. உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

பேரிடர் சூழலை எதிர்கெண்டு வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கனடாவும் இணைந்துள்ளது. கரோனா பரவல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேற்று காலை கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் கர்னியோ தெலைபேசியில் தொடர்பு கெண்டு பேசினார். அப்போது இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கனடா தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா வைரசின் இரண்டாவது அலையில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு வருவதைக் கண்டு கனடா மிகுந்த கவலை கெள்கிறது. இந்த தருணத்தில் எங்கள் நண்பர்களுக்கு (இந்தியர்கள்) உறுதுணையாக இருக்க நாங்கள் உறுதி யேற்றுள்ளோம். அந்த வகையில், இந்தியாவுக்கு ரூ.74 கோடியை (10 மில்லியல் டாலர்) கனடா வழங்கவுள்ளது. இன்னும் அடுத்தடுத்து பல்வேறுகட்ட உதவிகளை இந்தியாவுக்கு கனடா வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments