தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஏப்.29  தமிழகத் தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம்  வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று (28.4.2021)  புதிதாக 16,665 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண் ணிக்கை 11,30,167 ஆக அதிகரித் துள்ளது.

நேற்று (28.4.2021) ஒரே நாளில் மட்டும் கரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 51 பேரும், தனியார் மருத்துவ மனையில் 47 பேரும் என 98 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத் தில் இதுவரை 13 ஆயிரத்து 826 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந் துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று மேலும் 15,114 பேர் கரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,06,033 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத் தில் தற்போது 1,10,308 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங் களிலும் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 4,764 பேரும், செங்கல்பட்டில் 1,219 பேரும், கோவையில் 963 பேரும் கரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 20 லட்சத்து 05 ஆயிரத்து 237 பேருக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 11 லட்சத்து 30 ஆயிரத்து 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 82 ஆயிரத்து 519 ஆண்களும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 610 பெண்களும், 3ஆம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.

Comments