கேரளத்தில் தேர்தல் நிதி ரூ.10 கோடி மோசடி.... கார் விபத்து நாடகம் நடத்திய பா.ஜ.க.வினர்.....

 பாலக்காடு, ஏப்.27  தேர்தல் செலவினங்களுக்காக கருநாடகா விலிருந்து கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடியைமோசடி செய்ய சிலர் முயற்சித்ததாக பாஜக மாநில தலைமை புகார் தெரிவித்துள்ளது. இந்த பணம் பாலக்காடு மற்றும் மலம்புழா தொகுதிகளுக்கு அனுப்பப்பட் டது தெரியவந்துள்ளது. இந்த மோசடி திருச்சூரைச் சேர்ந்த ஒரு பாஜக தலைவரால் திட்டமிடப் பட்டதாகவும், இந்த மோசடி, தேர்தலின் கடைசி வாரத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.15 கோடி கோயம்புத்தூர் வழியாக பாலக்காடு சென்றடைந்தது. இது தவிர, பாஜகவின் தேர்தல் செலவுகளுக்காக மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து ரயிலில் அதிக பணம் வந்தது. தேர்தல் நிதி வெற்றி கரமாக திருச்சூருக்கு வந்தபோது, மாவட்டத்தில் பாஜகதலைவர் களில் ஒரு பகுதியினர் திட்ட மிட்டு பணத்தைப் பகிர்ந்து கொண்டனர். பாலக் காட்டில் இருந்து பணத்தை எடுத்துவந்த காரைவிபத்துக்கு உள்ளாக்கி பணத்தைப் பறிக்க திட்டமிடப் பட்டிருந்தது.ஆனால், கார் ஓட் டுநர் அனுப்பிய குறுஞ்செய்தி யால் திட்டம் தோல்வியடைந்தது.பாலக்காட்டில் பாஜக தலைவர் களில் ஒரு பகுதியினர், பணத்தை எடுத்துச் சென்ற வாகனத்தின் எண் உள்ளிட்ட விவரங்களை காவல்துறையிடம் கசிய விட் டனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கேரளத்தில், பாஜகவுக்கு ஓரள வுக்கு ஓட்டு கிடைக்கும் ' கிளாஸ்' தொகுதிகளுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரை மத்திய தலைமை கொடுத்தது. இதில், ஒரு சிறிய தொகை மட் டுமே செலவிடப்பட்டது. மீத முள்ள தொகையை தலைவர்கள் கையகப் படுத்தியதாக மத்திய தலைமைக்கு ஒரு பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.

எல்டிஎப் சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்த பாஜக வுக்கு பல கோடி ரூபாய் கொண்டு வரப்பட்ட சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்என்று எல்டிஎப் கன்வீனர் .விஜயராகவன் கோரி யுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை யில், வட இந்திய மாதிரியில் கறுப் புப்பணத்தை வெள்ளமெனப் பாய்ச்சி ஜனநாயகத்தை கவிழ்க் கும் முயற்சியை தேர்தல் ஆணை யம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனஅவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட பணம் எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு சென்றதாக தகவல்கள் தெரி விக்கின்றன. பணம் அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக சென்றிருக்கும். எனவே, முழு மையான விசாரணை தேவை என விஜயராகவன் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண் டுள்ளார்.

Comments