கரோனா நெருக்கடியை எதிர்கொள்ள - இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவி

 தடுப்பூசி மூலப்பொருட்களை அனுப்புகிறது அமெரிக்கா

சென்னை, ஏப்.27- கரோனா வைரஸ் நெருக்கடியை எதிர் கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளன. இந்தியாவில் கரோனா வைரஸ் 2ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவுக்கு உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவனின் செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்ன் நேற்று (ஏப்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை ஜாக் சல்லிவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியாவில் நிலவும் கரோனா பாதிப்பு தொடர் பாக பேசினார். இந்தியாவில் தயா ரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பூசியின் மூலப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும். இத்துடன் வெண்டிலேட்டர்கள், ரேபிட் டெஸ்ட் கிட்கள், பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்ட பொருட் களும் அனுப்பி வைக்கப்படும்.

இந்தியாவில் தடுப்பூசி தயா ரிக்கும் 'பயோ-' நிறுவனம், 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 100 கோடி டோஸ்கள் என்ற அளவில் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவின் வளர்ச்சி நிதி நிறுவனம் நிதியுதவி அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது சுட்டுரைப் பதிவில், ‘கரோனா முதல் அலை பரவலின்போது அமெரிக்காவுக்குத் தேவையான உதவிகளை இந்தியா செய்தது. தற் போது இந்தியாவில் அதி கரித்து வரும் இரண்டாவது அலையை சமாளிக்க அமெரிக்கா உதவும்என்று குறிப்பிட்டுள்ளார்.

உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக இங்கிலாந்து அரசும் தெரிவித்துள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியும் இந்தியாவுக்கு உதவி வழங்குவதாக உறுதி அளித்துள்ளன. இந்த நெருக்கடி யான நேரத்தில் இந்திய அரசுடன் பிரிட்டன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற் றும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிரிட்டனில் இருந்து ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், வெண்டி லேட்டர்கள் உட்பட கரோனா சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் 9 கன்டெய்னர்களில் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை டில்லிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித் துள்ளது.

இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க அளவில் ஆக்சிஜன் அனுப்பி வைக் கப்படும் என பிரான்ஸ் அறிவித் துள்ளது. சுவாசக் கருவிகளை அனுப்பி வைக்கவும் அந்நாடு திட்டமிட் டுள்ளது. இந்தியாவுக் கான உதவிப் பொருட்களை விரைவாக திரட்டி வருகிறோம் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.

Comments