10ஆம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

 சென்னை, ஏப்.7 பராமரிப்புப் பணி நடைபெறுவதால் இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரை புறநகர் மின்சார சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதுஇது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்னை சென்ட்ரல்-- கூடூர் மார்க்கத்தில், கும்மி டிப்பூண்டி - கவரைப்பேட்டை  இடையே பராமரிப்பு ப்  பணி  நடைபெறவுள்ளதால், இன்று முதல் வருகின்ற வரும் 10ஆம் தேதி (சனிக்கிழமை) வரை புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய் யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையிலி ருந்து பகல் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல் லும் ரயில் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்ட்ரலிலிருந்து மதியம் 1.25 மற்றும் 3.15 மணிக்கு கும் மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்ட்ரலி லிருந்து மதியம் 2.35 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும். வேளச்சேரியிலிருந்து மதியம் 1.55 மற்றும்  2.55 மணிக்கு கும் மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்ட்ரலிலிருந்து மாலை 4.35 மணிக்கு கும் மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும். கும் மிடிப்பூண்டியிலிருந்து மதியம் 3.40 மணிக்கு சென்ட் ரல் செல்லும் ரயில் மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து இயக் கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 4.30 மணிக்கு வேளச்சேரி செல் லும் ரயில் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப் படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 5.00,  5.30 மற்றும் 6.10 மணிக்கு சென்ட் ரல் செல்லும் ரயில் பொன் னேரி ரயில் நிலையத்திலி ருந்து இயக்கப்படும்.  மேலும் கும்மிடிப்பூண்டியிலிருந்து மதியம் 3.15 மணிக்கு சென்ட் ரல் வரை செல்லும் ரயில், சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 3.10 மணிக்கு சென்ட் ரல் வரை செல்லும் ரயில்,  சூலூர்பேட்டையிலிருந்து மாலை 5.15 மணிக்கு வேளச் சேரி வரை செல்லும் ரயில் ஆகிய மூன்று ரயில்களும் முழு மையாக ரத்து செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட ரயில் களுக்கு பதிலாக, கும்மிடிப் பூண்டியிலிருந்து மதியம் 1.55 மணிக்கு சென்ட்ரல் வரை ஒரு பயணியர் சிறப்பு ரயிலும், எளாவூரிலிருந்து மதியம் 2.10 மணிக்கு கடற்கரை வரை ஒரு பயணியர் சிறப்பு ரயிலும், பொன்னேரியில் இருந்து மாலை 4.20 மணிக்கு சென்ட் ரல் வரை ஒரு பயணியர் சிறப்பு  ரயிலும், வரும் 10ஆம் தேதி வரை தினசரி இயக்கப் படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image