தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 6, 2021

தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல்

 அண்ணா உருவாக்கிய உண்மையான ஆட்சி -தளபதி ஸ்டாலின் தலைமையில் பூத்துக் குலுங்கும்!

வாக்களித்த பின் செய்தியாளர்களிடையே  தமிழர் தலைவர்

சென்னை, ஏப். 6 இன்று நடைபெறும் தேர்தல் தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தலாகும்; அண்ணா உருவாக்கிய உண்மையான ஆட்சி - தளபதி மு..ஸ்டாலின் தலைமையில் பூத்துக்குலுங்கும் - மக்களுடைய நல்வாழ்வு உறுதி செய்யப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழர் தலைவர் வாக்களித்தார்!

இன்று(6.4.2021)காலைசென்னைஅடையாறு காமராஜ் அவின்யூ 2 ஆவது சாலையில் அமைந் திருக்கும் பாப்பான்சாவடி சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில்,  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது வாக்கினைப் பதிவு செய்தார். தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு செய்தியாளர்களை சந்தித் தார். அவ்விவரம் வருமாறு:

இருண்ட ஆட்சிக்கு

விடை கொடுக்கும் தேர்தல்

இன்றைய தேர்தல் என்பது தமிழக சட்டமன் றத்திற்கு அதன் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் அருமையான ஜனநாயகப் பரிசோதனையாகும்.

மக்களாட்சியினுடைய தத்துவம், மாண்பு காப்பாற்றக் கூடிய வகையில், கடந்த பத்தாண்டு காலமாக இருந்த ஓர் இருண்ட ஆட்சிக்கு விடை கொடுத்து, இருட்டை நீக்கி புதிய வெளிச்சத்தை உருவாக்குவதற்கு மக்கள் எல்லோரும் தயாராக ஆகிவிட்டார்கள் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த வாக்களிப்பு இன்றைக்கு நடைபெறுகிறது.

முந்தைய தேர்தல்களில் வேட்பாளர்கள் வாக்கா ளர்களைத் தேடினார்கள். இந்தத் தேர்தலினுடைய தனிச் சிறப்பு - கரோனா காலமாக இருந்தாலும், வாக்காளர்கள் ஒரு விடியலை நோக்கி, அது வர வேண்டும் என்பதற்காக வேட்பாளர்களைத் தேடி அழைத்து,  அவர்களுக்கு வாக்களிப்பதற்கு முன்பே தயாராகிவிட்டார்கள்.

மக்களுடைய நல்வாழ்வு உறுதி செய்யப்படும்

எனவே, ஜனநாயகம் தமிழ்நாட்டில் தழைக்கும். அண்ணா உருவாக்கிய உண்மையான ஆட்சி - தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் பூத்துக் குலுங்கும்! மக்களுடைய நல்வாழ்வு உறுதி செய்யப்படும்!

இதற்கு முன்பு இருந்த அராஜக ஆட்சி விடை கொடுத்து அனுப்பப்படும்.

இதுதான் வெற்றியின் அடையாளம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment