'நீட்' : அதிமுக அரசின் துரோகம்! துரோகம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 25, 2021

'நீட்' : அதிமுக அரசின் துரோகம்! துரோகம்!!

'நீட்' கூடவே கூடாது என்று கட்சி வேறுபாடு இல்லாமல்  தமிழ்நாடே ஒரு மித்த குரல் கொடுத்தது. அதன் விளைவு, தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரு  மசோதாக்கள் எதிர்க் கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கோட்டைக்குச் சென்று முதல் அமைச்சர் மாண்புமிகு . பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்து (31.1.2017) பாராட்டுத் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத் தில் 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்யவும் கேட்டுக் கொண்டார். அது போலவே தேசிய புதிய கல்விக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வற் புறுத்தினார். எழுத்துப் பூர்வமாகவும் கடிதம் கொடுக் கப்பட்டது. ஆனால் நடந்தது என்ன?

நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களுக்கும் மத்திய அரசிடமிருந்து சாதகமான ஒப்புதல் பெறாதது ஏன்? இவ்வளவுக்கும் பா...வின் கூட்டணியில் தானே அதிமுகவும் இருக்கிறது.

ஆனால் நடந்தது என்ன? இது குறித்து தோழர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. (சி.பி.எம்.) குடியரசு தலை வருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.  (17.4.2017)

29.4.2017 நாளிட்டு குடியரசுத் தலைவரிடமிருந்து பதில் வந்தது . என்ன தெரியுமா?

அதுபோல எந்த மசோதாவும் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு வரவேயில்லை என்பதுதான் அந்தப் பதில் - அதிர்ச்சியாக இல்லையா? எந்த இடத்தில், உயிரினும் மேலான இந்தப் பிரச்சினையில் தவறு நடந்திருக்கிறது?

அதன் பிறகு... உச்சநீதிமன்றத்தில் 'நீட்' தொடர்பான  விசாரணையின் போது  - மத்திய அரசு வழக்குரைஞர் சொன்ன பதில் பேரதிர்ச்சி! தமிழக அரசின் மசோதாக் களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை; திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்பதை தமிழக அரசுக்கு ஏற்கெனவே தெரிவித்து விட்டோம் என்றார். (22.9.2017 அன்று மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது)

என்ன கொடுமை - துரோகம் தெரியுமா? அந்தத் தக வலை அதிமுக அரசு தெரிவிக்கவில்லை என்பது மன்னிக் கத்தக்கதா?

இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் சட்டப் பேரவையில் பேசினார் - உண்மையை மறைத்த சட்டத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

அப்போதுகூட தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உண்மையைக் கூறவில்லை என்பது எத்தகைய  நாணயக் கேடு!

அதனைக் கண்டித்து சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் தலைமையில் உறுப் பினர்கள் வெளி நடப்பு செய்தனர் என்பதுதான் வரலாறு (9.7.2019).

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வதாரப் பிரச் சினையில் கூட அதிமுக அரசு எவ்வளவுப் பெரிய துரோகத்தைச் செய்துள்ளது - பார்த்தீர்களா?

இவர்களை மன்னிக்கலாமா? தேர்தலில் இவர்களைத் தோற்கடிக்க வேண்டாமா?

ஆதரிப்பீர், தி.மு.. கூட்டணியை -

அதன் மூலம் கடும் தண்டனையை

அதிமுக - பா... கூட்டணிக்குத் தாரீர்! தாரீர்!!

 

No comments:

Post a Comment