பா.ஜ.க.வினராலேயே புறந்தள்ளப்படும் மோடி - அமித்ஷா

பா... வேட்பாளர்களான எச். ராஜா மற்றும் வானதி சீனிவாசன் ஆகியவர்கள் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடியின் படத்தை பயன்படுத்தாதது குறித்துப் பேசியுள்ளார் மற்றொரு பாஜக வேட்பாளரான கே.டி. ராகவன்.

நாடாளுமன்ற தேர்தல்களின் போது மோடி அலை என்று சொல்லி எப்படி பாஜக பரப்புரை செய்கிறதோ, அதற்கு எதிரான மோடி எதிர்ப்பு அலை தமிழகத்தில் உள்ளது என உறுதிப்படுத்தும் நிலையே உள்ளது. ஏனென்றால் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களே மோடியின் படத்தையோ அல்லது அமித் ஷா படத்தையோ பயன்படுத்துவதில்லை. இதர கூட்டணிக் கட்சித் தலைவர்களின் படங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இது சம்பந்தமாக பாஜகவைச் சேர்ந்த கே.டி. ராகவன் பரப்புரையின் போது மோடி மற்றும் அமித் ஷா படங்களைப் பயன்படுத்தாதது வருத்தமளிக்கிறது என தனது அதிருப்தியை வெளிப்படுத்தி யுள்ளார்.

 தமிழகத்தில் அதிமுக கட்சியினர் வாக்கு சேகரிக்கச்செல்லும் போது பாஜக பெயர், அதன் கொடி மற்றும் மோடி பெயரைக் கூட உச்சரிக்க மறுக்கின்றனர். சமீபத்தில் சோழவந்தான் தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக வேட்பாளர் தனது வாக்கு சேகரிக்கச்செல்லும் வண்டியில் இருந்த அத்தனை பாஜக கொடிகளையும் அகற்றக் கூறினார். இதனை அடுத்து வாக்கு சேகரிக்க வந்த பாஜகவினர் சண்டையிட்டு அதிமுக தேர்தல் அலுவலகத்தை அடித்து உடைத்தனர்.    

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image