பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 19, 2021

பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாதா?

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில்மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்த விழாவில்  அதன் தலைவர் உஷா நேகியும் கலந்து கொண்டார்.   தொடக்க  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய  மாநிலத் தின் புதிய முதல்வர் தீரத் சிங் ராவத், பெண்களின் ஆடை அணியும் விதத்தைக் கடுமையாக விமர்சித்தார்.

அப்போது, “வீட்டில் சரியான கலாச்சாரம் கற்பிக்கப் படும் ஒரு குழந்தை, அவர் எவ்வளவு நவீனமானவராக இருந்தாலும், வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்.  சமீபத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து  வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த வகையான பெண் சமூகத்தில் மக்களைச் சந்தித்து அவர் களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வெளியே சென்றால், சமூகத்திற்கு, நம் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான செய்தியை தாங்கள் தருகிறோம் என்பது குறித்து சிந்திக்க மறுக்கிறார்கள்!" என்று குறிப்பிட்டார்.

இதுபோன்ற நடைமுறைகள்  எல்லாம் வீட்டிலேயே தொடங்குகின்றன என்று கூறியவர், தாம் என்ன செய்கிறோம் என்பதை தமது குழந்தைகள் பின்பற்று கிறார்களா என்பதைப் பெரும்பாலான தாய்மார்கள் கவனிக்கத் தவறுகிறார்கள், கிழிந்த ஜீன்ஸ் சமூக முறிவுக்கு வழி வகுக்கிறது, இது போதைப் பொருள் பயன்பாட்டுக்கு வழிவகுக்கிறது,  இது குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் அமைத்துள்ளமோசமான முன்மாதிரியின்விளைவாகும் என்றும் காட்டமாக விமர்சித்தார்.

கியாஞ்சி சே சன்ஸ்கார்" (கத்தரிக்கோலால் கலாச்சாரம்)  நன்றாக இருக்கும். ஜீன்சை,  கத்தரிக்கோல் கொண்டு வெட்டிக்கொண்டு, வெறும் முழங்கால்களைக் காண் பித்தல், கிழிந்த டெனிம் அணிந்து பணக்கார குழந்தை களைப் போலத் தோற்றமளித்தல் போன்றவை சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். 

பெண்கள் குறைவில்லாமல், முழங்கால்களைக் காட்டுகிறார்கள். இது நல்லதா? இதுபோன்ற பழக்க வழக்கங்கள் எங்கிருந்து வருகின்றன?  இவை அனைத் தும், மேற்கத்தியமயமாக்கலின்  பைத்தியக்காரத்தன வினவுகளே!

மேற்கத்திய உலகம் நம்மைப் பின்தொடரும்  நிலை உள்ளது. ​​யோகா செய்வது, அவர்களின் உடலை சரியாக மூடுவதற்கு வழி செய்யும். இதுபோன்று கலாச்சார சீரழி வுகள் ஏற்படுவதைத் தடுப்பதில்  பள்ளிகள்,  ஆசிரியர்களது பங்கு அவசியம்" என்றும் வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கணேஷ் ஜோஷி,  "எல்லா பெண்களும் நல்லமுறையில் குழந் தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியதுடன், “பெண்கள் வாழ்க்கையில் செய்ய விரும்பும் எல்லா விஷயங்களையும் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால், அவர்களது குடும்பத்தினரையும், குழந்தை களையும் கவனிப்பதே  என்று தெரிவித்துள்ளார்.

பெண்கள் உடையைப் பற்றிப் பேசும் பெரிய மனி தர்கள் ஆண்கள் உடையைப்பற்றி மூச்சு விடுவதில்லையே - ஏன்?

பொதுவாக அறிவுரை எல்லாம் பெண்களை நோக் கியே என்பது ஆண் ஆதிக்கச் சமுதாயத்தின் ஆணவப் போக்கே!

பெண்களின் ஆடைகளைப் பற்றிப் பேசுவோர் ஆடம் பரம், சிங்காரம், நகைகள்பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்! பெண்கள் இந்த விலங்குகளுக்குள் சிக்கி உரிமை முழக்கமிட முடியாமல் தங்களைத் தாங்களே தளைப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டத் தவறுவது ஏன்?

எவற்றைச் சொல்ல  வேண்டுமோ அவற்றைச் சொல் லாமல், யாரோ ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் போட்டுள்ளார் என்பதற்காக வாய் நீளம் காட்டுவது ஏன்?

மாற்றம் என்பதுதான் மாறாதது என்பது நினை விருக்கட்டும்!

No comments:

Post a Comment