பா.ம.க.வே திரும்பிப் பார்!


 "1989ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் பா... தனித்துப் போட்டியிட்டு, அதன் செல்வாக்கை வளர்த்து வந்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தமிழக மக்களுக்குத் துரோகம் செய்த திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்ததன்மூலம் பா...வின் வளர்ச்சி தடைபட்டது.

இதை உணர்ந்துதான் இனிவரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதென இரு ஆண்டு களுக்கு முன்பு 27.7.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் உறுதியான முடிவு எடுக்கப்பட்டது. அதில் உறுதியாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற புதிய பார்வையில் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இனிவரும் தேர்தல்களில் திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் இல்லாத கூட்டணி அமைப்பதில் உறுதியாக உள்ளது.

46 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சி யின் மீது, இலவசம், திரைப்படம் ஆகிய கலாச் சாரங்களால் சீரழிந்த தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். காலம் இட்ட கட்டளைப்படி 2016ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றி, திராவிடக் கட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கி எங்களின் பயணம் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

- டாக்டர் .இராமதாஸ், நிறுவனர், பா...

பா... வெள்ளி விழாவையொட்டி

வெளியிட்ட அறிக்கையிலிருந்து

அன்று உறுதி உறுதி என்று சொன்னது என்ன?

இன்று  .தி.மு..வோடு கூட்டணி

என்ன... என்ன... என்ன...!

ஆதரிப்பீர்

தி.மு.. கூட்டணியை!


Comments