தமிழகத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் 16 மாவட்டங்களில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 31, 2021

தமிழகத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் 16 மாவட்டங்களில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை

சென்னை, மார்ச் 31- தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று அதிக ரித்து வருவதால் 16 மாவட்டங்களில் கரோனா பரிசோதனையை அதிகப் படுத்த தலைமைச்செயலாளர் தலை மையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலை மைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழக சுகாதாரத்துறை முதன் மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ் ணன், தற்போதைய கரோனா நோய் தொற்று நிலை குறித்த விவரங்களை சமர்ப்பித்தார்.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்று நாள் ஒன்றுக்கு வார சராசரியை விட கூடுதலாக பதிவாகிறது.

குறிப்பாக, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல் லூரிகளில் இருந்து பரவிய நோய்த் தொற்று, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் ஆலயங் கள், கலாச்சார நிகழ்ச்சிகள் சார்ந்த கூட்டங்களில் கலந்துகொண்டவர் கள் மூலமாக மற்றவர்களுக்குப் பரவி உள்ளது.

சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் பயிற்சி நிலையங் கள், குடும்ப, கலாச்சார மற்றும் இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் மூலமும், கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் பணியிடங்கள் மூலமும் நோய்த்தொற்று பரவி வருவது தெரிய வந்துள்ளது.

முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது போன்றவையே இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். முகக் கவசம் அணியாததற்காக மார்ச் 16ஆம் தேதி முதல் தற்போது வரை ரூ. 2 கோடியே 9 லட்சம் ரூபாய் அபராதமாக வசூ லிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று கூடுதல் எண் ணிக்கையில் பதிவாகும் மாவட்டங் களில், மாவட்ட ஆட்சியர்கள் கூடு தல்  கவனத்துடன் செயல்படுவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்ததால், கரோனா சிகிச்சை மய்யங்களில் இருந்த படுக் கைகள் பிப்ரவரி மாதத்தில் பயன்பாட் டில் இல்லாமல் இருந்தன. அவற்றை மீண்டும் பயன்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு கரோனா சிகிச்சை மய்யம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment