செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 26, 2021

செய்தியும், சிந்தனையும்....!

இன்னும் அதிர்ச்சி உண்டு!

*           7ஆம் வகுப்புப்  பையனுக்கு இந்தியாவின் பிரதமர் யார் என்று தெரியவில்லை. காரைக்குடி பா... வேட்பாளர் அதிர்ச்சி! 

>>           இதில் என்ன ஆச்சரியம் - நமது பிதரமர் கார்ப்ப ரேட்டுகளுக்குத்தானே பிரதமர்!

ஆம் - இதுதான் இனவுணர்வு

*           அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களில் தமிழர்கள் நியமிக்கப்படுவர்.

- தளபதி மு.. ஸ்டாலின்

>>           இதற்குப் பெயர்தான் தமிழ் உணர்வு - இனவுணர்வு.   

இதுவா தீர்வு?

*           ஆளும் கட்சிக்குச் சாதகமாக செயல்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் இடமாற்றம்.

>>           சென்ற இடத்திலும் அப்படி இருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியுமா?

அதிமுக கட்சிக்குத் தலைவர் மோடியா?

*           கட்சியையும், ஆட்சியையும் நல்ல முறையில் நடத்த பா... உறுதுணையாக இருக்கிறது.              

- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

>>           கட்சியை நடத்தக் கூடவா? எல்லாம் மேலே இருப்பவன் பாத்துப்பான் என்கிற சினிமா டயலாக் தான் நினைவிற்கு வருகிறது.

ஆட்சியையே கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைத்து விடலாமே!

*           காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு.

>>           ஆள்வதற்கு அய்ந்தாண்டுக் காலம் கார்ப் பரேட்டுகளுக்கு அப்படியே நேரடி முதலீடாக அளித்து விடலாமே!

தேர்தல் படுத்தும் பாடு!

*           24 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு 

>>           தேர்தல் முடியட்டும் - தெரியும் சேதி!

இரட்டை நிலை

*           திருவாரூர், மயிலாப்பூர்களில் தேரோட்டம்.

>>           கரோனா  புது உருவில் வேகமாகப் பரவுகிறது அரசு எச்சரிக்கை!

சிறுபிள்ளை விளையாட்டு

*           வேட்பாளர்கள் ஆங்காங்கே சிலம்பாட்டம் கிரிக்கெட் எல்லாம் விளையாடுகிறார்கள்.

>>           அரசியலில் 'எட்டு வீடு கட்டி' ஆடுகிறார்களோ!

பாச முத்தம்

*           இலங்கைக் கடற்படையினரால் ஒரே நாளில் தமிழ்நாடு மீனவர்கள் 54 பேர் கைது! 

>>           இலங்கை அரசுக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்திற்கு இந்திய அரசு நீட்டிய பாசக் கயிறுக்கான பரிசு இது.

அரசியல் பட்டிமன்றம்

*           சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதுபற்றி ஆலோசிப்போம்! - .பிஎஸ்.

                சேர்க்க வாய்ப்பே இல்லை.  

                             - அமைச்சர் ஜெயக்குமார்

>>           சபாஷ் சரியான ட்டிமன்றம்    

சபாஷ் சரியான அறிவுரை

*           கருத்துக் கணிப்புகளால் அலட்சியமாக இருக்க வேண்டாம். 

- தி.மு..வினருக்கு மு..ஸ்டாலின் அறிவிப்பு

>>           அலட்சியம் அடி சறுக்கச் செய்யுமே!

ஆசையா? ஆத்திரமா?

*          தி.மு.. எதிர்க்கட்சியாகக் கூட வரக்கூடாது.               

- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

>>           ஆமாம் - ஆளும் கட்சியாக  வர வேண்டும்.

'சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்!'

*          தி.மு.. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி அல்ல - எதிரி கட்சி  

- ஜி.கே. வாசன், .மா.கா. தலைவர்

>>           அப்படி என்றால் இவரது என்ன ஆளும் கட்சியா?

இதுதான் மனுநீதி

*          புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம்.               

- சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குரைஞர் விவாதம்

>>           ஆமாம் - உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் கொடுப்பதுதான் 'அக்மார்க்' சட்டம்.

கரோனா காலமாக இல்லாவிடின் வெளிநாடு சென்று இருப்பாரோ...

*           மார்ச்சு 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 வரை நடக்கும் என்று கூறப்பட்ட நாடாளுமன்றம் நேற்றோடு முடித்துக் கொள்ளப்பட்டது.  

>>           இதில் எத்தனை நாள் பிரதமர் மோடி கலந்து கொண்டார் -  எத்தனை விவாதங்களில் பதில் அளித்தார் என்பது யாருக்காவது தெரியுமா?

No comments:

Post a Comment