வாக்காளர்களே! வரலாற்றைத் தெரிந்து கொள்வீர்!

ஹிந்துக் கோயில்களை மட்டும் கைவசம் வைத்திருக்கிறதாம் அரசு. அதை மாற்றப் போகிறதாம் ஆளில்லாத பா.. கட்சி கூறுகிறது.

மதவெறி ஆர்.எஸ்.எஸ். 1925இல் தொடங்கியது. சட்டம் கொண்டு வந்த நீதிக்கட்சி 1920 முதல் ஆண்ட கட்சி. சமூக சீர்திருத்தம் முதலில் - அரசியல் சீர்திருத்தம் பிறகு என்றது நீதிக்கட்சி.

பார்ப்பனரல்லாத சமூகத்தை மாற்றியமைக்கப் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்று 1917இல் கோவை மாநாட்டில் முடிவானது. அதற்கேற்ப 18.12.1922இல் இந்து அறநிலையச் சட்டம் தாக்கல் ஆனதுCharities Commission என்ற  இங்கிலாந்து நடைமுறைப்படி இந்து அறநிலையங்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சட்டம் வகை செய்தது.

பொதுக் கோயில்கள் அனைத்தும் சட்டப்படி கண்காணிக்கப்பட்டன. வரவு, செலவுக் கணக்குகள்  தணிக்கை செய்யப்பட்டன. தாம் அடித்து வந்த "கொள்ளை" தடுக்கப்படுகிறதே என்று ஆரியம் அலறியது. ஆளுனரிடம் காவடி தூக்கியது. ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தைச் சொத்தைக் காரணம் காட்டி, வைஸ்ராய் திருப்பி விட்டார்.

சென்னை சட்டமன்றம் 85 முறை கூடி விவாதித்தது. 1200 திருத்தங்கள் கூறப்பட்டன. சாதாரணமான திருத்தங்கள் சில ஏற்கப்பட்டன. மற்றவை நிராகரிக்கப்பட்டன. 1925இல் மீண்டும் வைஸ்ராய்க்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு சட்டமானது. 1925ஆம் ஆண்டின் முதல் சட்டம்.

ஹெக்டேவர் அறிவார் இந்த வரலாற்றை

ராஜா, ராகவ, வகையறாக்கள் அறியார்.

1948இல் .பி.ராமசாமி ரெட்டியார் பிரதமராக இருந்தபோது சட்டத்திற்குத் திருத்தம் வந்தது. கடும் விவாதம். காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஒரு பக்கம் - பார்ப்பனரல்லாதார் எதிர்ப்பக்கம். சட்டத் திருத்தம் நிறைவேறியது.

ஒரு ஃபிளாஸ் பேக்

1857இல் சிப்பாய்க் கலகத்தின் முடிவில் இந்தியாவில் மத விஷயங்களில் தலையிடாக் கொள்கை வந்தது. அதற்கு முன் திருப்பதி கோயில் கிழந்திந்தியக் கம்பெனி சார்பில் சித்தூர், மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் காரணம், பார்ப்பனர் கொள்ளை - கோயில் மகந்துவின் நிதி கையாடல்.

இத்தகைய வரலாறுகளைத் தெரியாதோர் தெரி(ளி)ந்து கொள்க!

Comments