கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுங்கள்..

 மனித வாழ்க்கை உண்பதும், உடுத்துவதும்ஆடம்பரத்திற்காக நுகர்வது  போன்றவைகள்  சுழற்சியின் அடிப்படையில் சமூகத்தை ஆட்டி படைக்கின்றன ஒருமனிதன் நல்ல பெயர் எடுக்கப்பட்ட நிறைய மெனெக்கெட வேண்டும் அதாவது தனது செயல்கள்  பிறருக்கு தீமைதராமல் இருக்க வெண்டும் தந்தை பெரியார் சொன்னது போல் அவ னவன் வாழ்க்கையை வாழக் கூடாது அடுத்த வர்களும் பலன் அடைய வாழ வேண்டும்...

 நம்மிடம் இருக்கும் நல்ல விசயங்களை பிறருக்கும் பயன் தரும் அளவில் வாழ்வது நல்லது உதாரணமாக பெண்கள் கல்வி கற்று  பொருளாதார பயன் அடைந்தால் அவள் சார்ந்த வீடும், சுற்றமும் மகிழ்ச்சியாக மாறும்..

 சமூகம் படித்தவர்களால் மேம்படும்  அய்யா சொன்ன கருத்துக்களில் மிகவும் முக்கியமானது ..

கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுங்கள்உலக மேன்மைக்கான கருத்து இதை பெண்கள் சுலபமாக கடந்து போக முடியாது கரண்டி பிடுங்கப்பட்டு பள்ளிக்கு அனுப்பப்பட்ட பெண்கள் இன்று விண்வெளி வரை கோலோச்சு கிறார்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும்  சரிபாதி ஆண்கள் இடத்தை அனாயசமாக நிரப்பியிருக்கிறார்கள்... பெரும்பாலான பெண்கள் பொருளீட்டும் மனிதர்களாக மாறியிருக்கிறார்கள் மும்பையில் இரயில் நிலையத்தில் காலை 9 மணிக்கும் மாலை 5 மணிக்கும் நிரம்பி வழியும்  உழைக்கும் பெண்கள் கூட்டம் பெண்களின் உழைப்பை நமக்கு புரிய வைக்கும் ..

பொதுவாக பெண்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்பார்கள் வீடுகளில் கூலியில்லாமல் கடமை என்று சொல்லி அவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது ...பெண்கள் உழைக்கவேண்டும் தவறில்லை ஆனால் அதற்கான கூலி தரப்பட வேண்டும் .. உழைப்புக்கான மரியாதையை கூலி மட்டுமே தீர்மானிக்கும்  எந்த இடத்திலும் இலவசமாக பெண்கள் உழைப்பை தரக்கூடாது இலவசமாக உழைக்கும் இடத்தில் உழைப்பு சுரண்டலும் சுயமரியாதையும் பறிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை ..

கல்வியும், வேலை வாய்ப்பும்  இரு கண்கள்  பெண்கள் பொருளீட்ட வெளியே வேலைக்கு செல்ல வேண்டும் நாட்டு நாட்டுநடப்புகள் தெரிந்து தன்னையும் ,சமூகத்தையும் மேம்படுத்த முடியும் .. கல்வி கற்ற பெண்கள் அடக்குமுறைகளிலிருந்து தன்னை தற்காத்து கொள்ளுகிறாள்..அதுமட்டுமல்ல அதேப் போன்று அடக்கியாளும் பண்பு அவளிடம் இல்லாமல் போய்விடுகிறது ..

படித்த பெண்களுக்கு தனக்கான துணையை தானே தேர்ந்தெடுக்கும்  வாய்ப்பு கிடைக்கிறது.. பிடித்த விசயங்களில்  தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் பலத்தை அடைவது மிகவும் முக்கியமானது.. அடிமைதனத்திலிருந்து விடுபட்டு தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறது..

கடையில் கிடைக்கும் பொருளை போல வாழ்க்கை துணையை வாங்குவதால் காசு கொடுத்து துன்பத்தை வாங்கி கொள்ளு கிறார்கள்.

 ஆனால் சுயமரியாதையை தெரிந்த ஆணும் பெண்ணும் இந்த தவறுகளை செய்வதில்லை .. அவரவர்களுக்கான வாழ்க்கை வாழாமல் சமூக மாற்றத்திற்கான எடுத்துக்காட்டாக வாழும் மனிதர்கள் நல்ல சமூகத்தினை உருவாக்குவார்கள் அதுவும் பெண்கள் விழிப்புணர்வு பெற்றால் அந்த சமூகம்  நல்ல வாரிசுகளை உருவாக்கும் சமூகம் விருத்தியாகும்

தனக்கான உடைக்கும்,  உணவுக்கும் அணிகலனுக்கும் அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையே பெரும்பான்மை பெண்கள் வாழ்கிறார்கள்.. இந்த நிலை மாற வேண்டும்  ஒவ்வொரு ஆணும் உழைக்காமல் இல்லவே இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும்... அது போல பெண்களும் உழைக்க வேண்டும்... சுகவாசிகளாக, சுக போகமாக வாழ பழக்கப்பட்டிருந்தாலும்  இனிவரும் சந்ததிகளை சுயமரியாதை மனிதர் களாக மாற்றும் பொறுப்பும் கடைமையும் பெண்களுக்கு உள்ளது என்பதை உணர வேண்டும்... மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துவோம்  தந்தை பெரியாரின் சூளுரையான ,

கரண்டியை பிடுங்கி விட்டு  புத்தகத்தை கொடுங்கள் சுயமரியாதை உலகத்தில் பெண்கள் ஆட்சி செய்யட்டும்... 

புதியகுரல்விஜி

Comments