அஞ்சல் அலுவலகமா?அசுத்த நீரின் வியாபார நிலையமா?

அஞ்சல் அலுவலகத்திற்கு அஞ்சலட்டை வாங்கச் சென்ற ஒரு தோழருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தவறான இடத்திற்கு வந்துவிட்டோமோ என்று திடுக்கிடுகிறார். அவர் எழுதிய கடிதம் (தனியே காண்க!).

அரசு தெரிந்துதான் செய்கிறதா - தெரியாமல் தான் செய்கிறதா? அறியாமை காரணமா? அல்லது அவர்களைப் பிடித்தாட்டும் மதப்போதை இப்படியெல்லாம் செய்யத் தூண்டுகிறதா?

கங்கை நீர் புனிதமானதுதானா? சபரிமலை பம்பைத் தீர்த்தம் பருகத் தகுதியுள்ளதுதானா?

பாமர மக்கள் மத்தியில் கூட பாதுகாப்பான தண்ணீரை அருந்த வேண்டும் என்று விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ள காலக்கட்டத்தில் அரசாங்கமே - உயிரோடு விளையாடும் விஷப்பரீட்சையில் ஈடுபடலாமா?

கங்கை நீரைப்பற்றி இதற்கு முன் ஏராளமான தகவல்கள் வந்துள்ளனவே - சபரி மலையில் ஓடும் பம்பை நீரின் துர்நாற்றம் குடலைப் பிடுங்குகிறது என்று அங்கு சென்று வந்த பக்தர்களே புலம்புவதுண்டே!

பாபம் போக்குவதாகப் பசப்பும் காசி நகரத்தில் மட்டும் கங்கை நீரில் கலக்கும் சாக்கடை 20 மில்லியன் காலன்.  நாள்தோறும் 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு அந்த சாம்பலும், எலும்பும்  கங்கை நீரில் கொட்டப்படுகின்றன. ஆண்டுதோறும்  9,000 கிழட்டுப் பசுக் கள் உயிருடன் கங்கை யில் வீசப்படுகின்றன  (இவர்கள்தான்கோமாதாபோற்றும் புத்திரசிகாமணிகள்).

கொல்கத்தா நகரில் மட்டும் தொழிற் சாலைகளின் கழிவுப் பொருள்கள் சாங்கோ பாங்கமாக கங்கையில் கலக் கின்றன.

சபரிமலையில் பாயும் பம்பை நதியில்ஆபாசமோஅய்யய் யோ, சொல்லும் தரமன்று. ‘இந்தியா டுடே’ (19.12.2007)ஒரு சிறப்புக் கட்டுரையை விலாவரி யாக வெளியிட்டது.

பம்பை நதியில் 100 மில்லி லிட்டர் நீரில் 3 லட்சம் எம்.பி.என்.  கோலி ஃபார்ம் பாக்ட்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த பாக்ட்டீரி யாக்கள் 500 தாண்டினாலே உடலுக்குக் கேடாக முடியும் என்கிறது மருத்துவ ஆய்வு.

கும்பகோணத்தில் மகாமகம் முடிந்து, மகாமகக் குளத்து நீரை ஆய்வு செய்யும் போது 28 விழுக்காடு மலக்கழிவும், 40 விழுக்காடு சிறுநீர்க் கழிவும் இருப்பதை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் உறுதி செய்ததாக தஞ்சை மாவட்ட ஆட்சியரே வெளிப் படுத்தினாரே!  ( (DT NEXT 23.2.2018))

உண்மை இவ்வாறு இருக்க மத்திய அரசின் கீழ் செயல்படும் அஞ்சல் துறையே கங்கை, பம்பை நதிநீரைத் தீர்த்தம் என்ற பெயரால் பாட்டிலில் அடைத்து வியாபாரம் செய்கிறது (மத்திய அரசு) என்றால் இந்த வெட்கக்கேட்டை எது கொண்டு சாற்றுவது?

வெளிநாட்டுக்காரன் கேட்டால் வாயாலா சிரிப்பான்?

 விஞ்ஞான மனப்பான் மையை மக்கள் மத்தியில் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம்  (பிரிவு51 Ah) வலியுறுத்துகிறது. மதவாதம் தலைக்கேறி மூக்கால் வழிகிறது, என்ன செய்ய!

 மின்சாரம்

Comments