சந்தர்ப்பவாதிகள் ஜாக்கிரதை! அன்று சொன்னது என்ன- இன்று சொல்லுவது என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 28, 2021

சந்தர்ப்பவாதிகள் ஜாக்கிரதை! அன்று சொன்னது என்ன- இன்று சொல்லுவது என்ன?


 (ஜி.எஸ்.டி., லோக்பால், அந்நிய முதலீடு, ஆதார், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், பெட்ரோல் விலை - இவைபற்றி அன்று  குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அடித்து அடித்துக் கூறியது என்ன?

இன்று பிரதமராக வலிந்து வலிந்து வரிந்து வரிந்து ஆதரிப்பது ஏன்? ஏன்?

இதோ ஆதாரங்கள் பேசுகின்றன.)

ஆதார் :

2014 இல் மோடி ஆதார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து இந்த ட்விட்டை பதி விட்டு இருந் தார்.

ஆதார் என் பது தனிப்பட்ட உரிமையைப் பறிக்கும் செயல் ஆகும், இது எக்காலமும் வெற்றிகரமான ஒன்றாகவே இருக்க முடியாது என்றார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்

திட்டம் மன்ரேகா


2006 ஆம் ஆண்டில் Mahatma Gandhi National Rural Employment Guarantee act(MGNREGA) என்ற 100 நாள் வேலைத் திட்டம் சோதனை முயற்சியாக 200 மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.

தொடக்கம் முதலே MGNREGA  திட்டம் மீது நரேந்திர மோடி அவர்களுக்கு நன்மதிப்பு இல்லை. அந்த திட்டத்தை எதிர்க்கவே செய்தார். 2015 பட்ஜெட்டில் கூட நிதியமைச்சர் அருண் ஜேட்லி இத்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணத்தில் இல்லை எனக் கூறினார். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் சரியாக நடைபெறவில்லை எனக் கருதினர். வேறு வழியின்றி அத்திட்டத்திற்கான நிதியானது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸின் 100 நாள் வேலைத் திட்டம் குறித்து நகைச் சுவையாக பேசிய பிரதமர் மோடி MGNREGA  திட்டத்தை இன்னும் சிறப்பாக செய்வோம் என மக்களவையில் தெரிவித்து இருந்தார்.

நேரடி மானியப் பரிமாற்றம்:

Directly benefits transfer என்னும் திட்டமானது பயனாளர்களுக்கு மானியத்தை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதை நோக்கமாக கொண்டது.

2017 இல் கருநாடகாவில் பேசிய பிரதமர் மோடி, நாங்கள் தொடங்கிய Directly benefits transferமூலம் சரியான மக்களுக்கு தொகை சென்றடையச் செய்து நடுத்தரகர்களை நீக்கியதாக கூறி இருந்தார்.

ஆனால்,Directly benefits transferதிட்டம் காங்கிரஸ் ஆட்சியில் 2013-2014 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2013-2014 நிதியாண்டில் Directly benefits transfer ஷீ முயற்சியால் 7 ஆயிரம் கோடி அளவிற்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது,Directly benefits transfer  திட்டத்தை பெருமையாக பேசி வருகிறது மோடி அரசு.

பெட்ரோல் விலை அதிகரிப்பு :

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்ந்தபோது அதற்காக கடுமையான விமர்சனத்தை முதல்வர் மோடி மற்றும் பிஜேபியை சேர்ந்த பலரும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தனர். முதல்வர் மோடி காங்கிரஸ் அரசு தோல்வியடைந்தாக விமர்சித்தார்.

ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து இருந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மட்டுமே கண்டது. தேர்தல் சமயங்களில் மட்டும் நிலையான விலை மற்றும் விலை குறைப்பு நிகழும்.

ஜி.எஸ்.டி.

2011 when GST bill was first introduced by the then UPA government.  Modi, while talking about the GST, 

can be heard saying that the tax reform can never be successful.

மாநில முதல்வராக இருந்த போது ஜி எஸ் டி மாநில வருவாயைப் பறித்து அனைத்தையும் மத்திய அரசிடம் கொண்டு சேர்க்கும் திட்டம், இதை எக்காலத்திலும் வெற்றியான ஒரு திட்டமாக பார்க்க முடியாது என்று கூறி கடுமையாக எதிர்த்து பேசினார், தனது சமூகவலைதளப்பக்கத்திலும் இது குறித்து எழுதினார்.

லோக்பால்:

காங்கிரஸ் ஆட்சியில் லோக்பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என அன்னா ஹசாரே போராடிய போது அதற்காக ஆதரவு அளித்து பேசியது பிஜேபி.

ஆனால், 2017 இல் பேசிய அன்னா ஹசாரே, “ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவேன் என கூறிய பிரதமர் மோடி தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை மற்றும் லோக்பால் மசோதாவை செயல்படுத்துவதில் ஒன்றும் செய்யவில்லை எனக் குற்றம் சாற்றியுள்ளார்.''

அந்நிய முதலீடு

காங்கிரஸ் இந்தியாவை அந்நிய முத லீட்டுச் சந்தை மூலம் விற்கப் பார்க்கிறது, என் றார். தற்போது அவர் ஒட்டு மொத்த அரசு நிறுவனங்களையுமே தனியாருக்குக் கொடுக்க திட்டமிட்டு வருகிறார்.

No comments:

Post a Comment